Top
undefined
Begin typing your search above and press return to search.

திருவல்லிக்கேணியில் மிக விமர்சியாக நடைபெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேர் திருவிழா

திருவல்லிக்கேணியில் மிக விமர்சியாக நடைபெற்ற பார்த்தசாரதி பெருமாள் கோவில் தேர் திருவிழா

By :

  |  5 May 2018 6:16 PM GMT

உலகப் புகழ் பெற்ற திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று காலை, தேரோட்டம் மிக விமர்சியாக நடந்தது. சென்னை, திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவம், ஏப்ரல்-29ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஆறாம் நாள் விழாவான நேற்று காலை, ஆனந்த விமானத்தில், ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியாருடன், உற்சவர் பார்த்தசாரதி பெருமாளின் திருவீதி ஊர்வலம்  நடைபெற்றது. திருவல்லிக்கேணி மாடவீதிகளை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார் பார்த்தசாரதி பெருமாள்.
அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை ஏழு மணி அளவில், ஸ்ரீதேவி - பூதேவி சமேத, உற்சவர் பார்த்தசாரதி பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் பெரும் திரளாக பங்கு பெற்று தேர் இழுத்து பெருமாளின் அருளை பெற்றனர்.
தேர் திருவிழாவில் பங்கு பெற்ற, சென்னை அம்பத்தூரை சேர்ந்த பார்த்தசாரதி, (வயது 28) என்ற இளைஞர் தமிழ் கதிரிடம் கூறுகையில், "நான் பிறந்து வளர்ந்தது திருவல்லிக்கேணியில் தான். பார்த்தசாரதி பெருமாளின் மீது உள்ள பக்தியினால் தான் எனது பெற்றோர்கள் எனக்கு பார்த்தசாரதி என்று பெயர் வைத்தார்கள். இந்த இடத்தின் தொன்மையான பெயர், "திரு அல்லி கேணி". அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் கிடைத்த பெயர். இது காலப்போக்கில் மருவி, திருவல்லிக்கேணி என்ற பெயர் பெற்றது. ஆங்கிலத்தில் Triplicane என்று மக்கள் சாதாரணமாக அழைக்க துவங்கி விட்டனர். ஒவ்வொரு வருடமும் தவறமால் பார்த்தசாரதி பெருமாளின் சித்திரை ப்ரஹ்மோத்சவத்தில் பங்கு பெறுவது வழக்கம். இந்த ப்ரஹ்மோத்சவத்திற்கு தமிழகம் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகாவை சேர்ந்த மக்களும் பங்கு பெறுவார்கள். ஒவ்வொரு வருடமும் என் சிறு வயது நண்பர்களுடன் இனணைந்து, தேர் இழுத்து பெருமாளின் அருளைப் பெறுவதில் உள்ள இன்பம் வேறு எதிலும் கிடைப்பதில்லை." என்று கூறினார்.
Next Story