Top
undefined
Begin typing your search above and press return to search.

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தினேஷ் தற்கொலை - டாஸ்மாக்கால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு

நீட் தேர்வு எழுதவிருந்த மாணவன் தினேஷ் தற்கொலை - டாஸ்மாக்கால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு

By :

  |  6 May 2018 11:41 AM GMT

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குருக்கள்பட்டியை அடுத்த கே.ரெட்டியபட்டியை சேர்ந்த மாடசாமி மகன் தினேஷ் நல்லசிவன். நீட் தேர்வு எழுதவிருந்த மாணவரான இவர் மே 2 ஆம் தேதி, காலை தந்தையின் குடிப்பழக்கத்தை நிறுத்த சொல்லி நெல்லை ரெயில்வே மேம்பாலத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மதுவுக்கு அடிமையான தந்தையை மீட்க முடியாததால் குடும்பம் சீரழிவதை சகித்து கொள்ள முடியாமல், தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவர் தினேஷிடமிருந்து நீட் தேர்வில் பங்கேற்பதற்கான நுழைவுச்சீட்டு கைப்பற்றப்பட்டிருக்கிறது.


மருத்துவம் படித்து சமூகத்திற்கு சேவை செய்திருக்க வேண்டிய ஒரு மாணவன், மதுவால் ஏற்பட்ட குடும்பச்சீரழிவு காரணமாக, தற்கொலை செய்து கொண்டிருப்பது 50 ஆண்டுகாள திராவிட ஆட்சியின் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.

மூதறிஞர் ராஜாஜி முதல்வராக இருந்த போது, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவந்தார். பிறகு, கலைஞர் கருணாநிதி ஆட்சியில், மது விலக்கு தகர்க்கப்பட்டு, மது கடைகள் திறக்கப்பட்டன. இன்று, மது விலக்கு என்பது தமிழக மக்களுக்கு ஓர் கனவாக இருக்கிறது.


Next Story