Top
undefined
Begin typing your search above and press return to search.

உலகின் பண்டைய மொழிகளில் தமிழ் மொழி உள்ளதில் வியப்பேதும் இல்லை : குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்

உலகின் பண்டைய மொழிகளில் தமிழ் மொழி உள்ளதில் வியப்பேதும் இல்லை : குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த்

By :

  |  6 May 2018 6:12 PM GMT


பாரத நாட்டின் குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு தமிழ் மொழியை மிகவும் பண்டைய மொழி என புகழ்ந்துள்ளார்.


சென்னை பல்கலைக்கழகத்தின் 160-வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு பல்கலைக்கழகத்தின் பங்களிப்பைக் குறிப்பிட்டார். தென்னிந்தியாவின் வலிமையான கல்விக் கட்டமைப்பிற்கு சென்னை பல்ககலைக்கழகம் ஒரு முக்கிய காரணம் என்றும் கூறினார்.


உலகின் பண்டைய மொழிகளில் தமிழ் மொழி உள்ளதில் வியப்பேதும் இல்லை. இலக்கியம் குறித்தும் கற்றலின் அடிப்படை குறித்தும், மற்ற பலரை விட பல நூறு வருடங்களுக்கு முன்னரே தமிழ் மொழி ஆராயத் தொடங்கி விட்டது  என்றும் கூறினார்.

சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி அவர்கள் மாணவர்களிடம் பேசும் போது , தமிழ் மொழி சம்ஸ்க்ருதத்தை விடவும் பழமையான மொழி என்று கூறி தமிழ் மொழியை மிகவும் பெருமை படுத்தினார். ஆனால் இங்குள்ள திராவிட கட்சிகள், பிரதமரையும் , பா.ஜ.க வையும் தமிழ் மொழியின் விரோதிகள் போல பொய் கூற்றுகளை கூறி தமிழ் மொழியை வைத்து உணர்ச்சிகளை தூண்டி அரசியல் செய்து வருகின்றன.

Next Story