Top
undefined
Begin typing your search above and press return to search.

₹85 கோடியை மருத்துவ மாணவர்களிடம் முறைகேடாக வாங்கிய S.R.M. பல்கலைக்கழகம்

₹85 கோடியை மருத்துவ மாணவர்களிடம் முறைகேடாக வாங்கிய S.R.M. பல்கலைக்கழகம்

By :

  |  6 May 2018 6:01 PM GMT

2016-ஆம் ஆண்டு 136 மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் சேர்ந்து S.R.M. பல்கலைக்கழகம் மீது புகார் அளித்தனர். அந்த புகாரில் மருத்துவ படிப்பு படிப்பதற்காக மொத்தமாக 85 கோடியை வாங்கிக்கொண்டு S.R.M. பல்கலைக்கழகத்தின் தலைவர் பச்சைமுத்து என்கிற பாரிவேந்தர் ஏமாற்றி விட்டதாக குறிப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து மே 29, 2016-இல் பச்சைமுத்துவின் கூட்டாளியான மதன் தற்கொலை கடிதம் எழுதி வைத்து விட்டு தலைமறைவானார். அதில், தான் வாங்கிக்கொண்ட பணம் அனைத்தும் S.R.M பல்கலைக்கழகத்தில் ஒப்படைத்து விட்டதாகவும் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாகவும் தெரிவித்தார்.
ஆறு மாதங்களாக தலைமறைவாகி இருந்த மதனை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருப்பூரில் போலீசார் கைது செய்தனர். திரைப்பட தயாரிப்பாளராகவும் வேந்தர் மூவீஸின் நிர்வாகத்திலும் பங்கு பெற்றவர் மதன் என்பது குறிப்பிடத்தக்கது . பிறகு S.R.M குழுமத்தின் தலைவரும் IJK வின் நிறுவனருமான பச்சைமுத்து கைது செய்ப்பட்டார். பிறகு நீதிமன்றம் மூலம் ₹75 கோடி வாங்கியவர்களிடம் திருப்பி அளிக்கப்பட்டது. அதன் பின் பச்சைமுத்து ஜாமினில் வெளியே வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பொத்தேரி ஏரியை பச்சைமுத்து ஆக்ரமித்து கல்லூரியை கட்டி உள்ளதாக புகார்கள் எழுந்தது. புதிய தலைமுறை, வேந்தர், புதுயுகம் போன்ற தொலைக்காட்சிகளிலும் பச்சைமுத்துவின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
 References:
https://timesofindia.indiatimes.com/city/chennai/srm-medical-seat-scam-madras-
hc-allows-disbursement-of-rs-85-crore-to-affected-students-/articleshow/60391700.cms

https://www.thenewsminute.com/article/madras-hc-quashes-fir-against-srm-s-pachamuthu-medical-admission-scam-70825
Next Story