Top
undefined
Begin typing your search above and press return to search.

பெரியகுளத்தில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை விவாதிக்க மறுக்கும் தமிழக ஊடகங்கள்!

பெரியகுளத்தில் பட்டியல் இன மக்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை விவாதிக்க மறுக்கும் தமிழக ஊடகங்கள்!

By :

  |  6 May 2018 11:00 AM GMT

பெரியகுளம் அருகே உள்ள கிராமம் பொம்மிநாயக்கன்பட்டி. அங்கு பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வள்ளியம்மாள் என்பவரது உடலை, மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் வசிக்கும் தெரு வழியாக எடுத்துச் செல்ல எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடையே கலவரம் வெடித்தது. பட்டியலின மக்களின் கடைகள், ஆட்டோ, பைக் ஆகியவற்றுக்கு தீ வைத்தும், அவர்களை கொலை வெறியில் தாக்கியும், மாற்று மதத்தை சேர்ந்த மதவாதிகள் அட்டூழியம் செய்தனர். சம்பவம் அறிந்து விரைந்த காவல்துறையினர் கலவரத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
முடியாத சூழலில், தேனி நகரத்தில் இருந்து இருநூறுக்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு தற்போது நிலைமையை கட்டுப்படுத்தியுள்ளனர். இதனால் பட்டியலின மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். 50 ஆண்டுகளாக சமூக நீதி பேசி வரும் திராவிட கட்சிகள் இதைப் பற்றி வாயை திறக்கவே இல்லை. ஏனெனில், இதைப் பேசினால் மாற்று மதத்தின் வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ என்ற அச்சமா ?
இதைத் தொடர்ந்து பா.ஜ.க தேசிய செயலாளர் H.ராஜா டிவட்டரில் கருத்து தெரிவிக்கையில், "தேனி மாவட்டம் பெரியநாயக்கன்பட்டியில் தலித் சமுதாய மக்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர் முஸ்லிம் மதவெறியர்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது", என்று கூறினார்.
https://twitter.com/HRajaBJP/status/993066626919550979?s=19
ஆனால் இந்த செய்தியை தமிழக ஊடகங்கள் விவாதிக்க மறுப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் ஏன் இந்த செய்தியை சொல்ல கூட அஞ்சுகிறார்கள்? பதில் கூறுவார்களா?
Reference : https://www.vikatan.com/news/tamilnadu/124177-riot-in-theni-bikes-shops-arson.html
Next Story