Top
undefined
Begin typing your search above and press return to search.

காங்கிரஸை விரட்டியடிக்க காத்திருக்கும் கர்நாடக தலித் மக்கள் : அதிர்ச்சியில் சித்தாராமையா

காங்கிரஸை விரட்டியடிக்க காத்திருக்கும் கர்நாடக தலித் மக்கள் : அதிர்ச்சியில் சித்தாராமையா

By :

  |  9 May 2018 5:43 AM GMT

காங்கிரஸின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே-விற்கு கர்நாடகவில் முதல்வர் பதவி மறுக்கப்படுவருகிறது. மைசூர் அருகே நிகழ்ந்த சாலையோர நிகழ்ச்சி ஒன்றில் திரு.கார்கே கலந்து கொண்ட போது பெரும் கூட்டமாக மக்கள்
அவரை சூழ்ந்து கொண்டு “தங்களுக்கு சித்ராமையா முதல்வராக வேண்டாம், நீங்கள் தான் முதல்வராக வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 2013, மிக நுட்பமாக தீட்டப்பட்ட நாசவேலை காரணமாக தலித் தலைவர், ஜி. பரமேஸ்வர் தேர்தலில் தோற்றுப்போனார்.  அதுவே தனக்கான முதல்வர் இருக்கை மறுக்கப்பட காரணமாக அமைந்தது என்பதை திரு கார்கே, நினைவு கூர்ந்தார். இதை கேட்டு கோபத்தின் உச்சத்திலிருந்த தலித் மக்கள் இந்நிலை மாற, “இத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியுமென” ஒரு சேர குரல் எழுப்பினர்.
இது ஒன்றும் கர்நாடாக காங்கிரஸில் புதிதல்ல. தலித்துகளுக்கு பதவி மறுக்கப்படுவது
இங்கு இயல்பான ஒன்று. ஜி.பரமேஸ்வர் மற்றும் திரு. கார்கே ஆகிய இரண்டு தலித் தலைவர்களுக்கு தொடர்ச்சியாக பதவி மறுக்கப்படுவது தான் தலித் மக்களை பெரும் கவலைக்குள்ளாக்குகிறது.
ஜி. பரமேஸ்வர், 2013 தேர்தலில் தோற்றதற்கு சித்ராம்மையாவின் உட்கட்சி சூழ்ச்சி
காரணமாக இருக்கலாம் என்று தலித் மக்கள் முழுமையாக நம்புகின்றனர். எனவே பல இடங்களில் அவருக்கு எதிரான பிராச்சாரங்கள் வெளிப்படையாக செய்யப்பட்டாலும், சில இடங்களில் இரகசியமாக அவருக்கு எதிரான பிராச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தலித்துகளின் தற்போதைய கோபம் தொடருமே ஆனால், தலித்துகளின் வாக்குகளை பெருமளவில் நம்பியிருக்கும் சித்தராம்மையாவிற்க்கு,  மே 12 அன்று பெரும் ஏமாற்றமே பரிசாக கிடைக்கும்.
மேலும் சித்தராம்மையாவின் சமூகத்தை சேர்ந்த மக்கள் மட்டுமே பயனடையும் விதமாய் நலத்திட்டங்கள் அமைந்திருக்கின்றன. மற்ற தலித் மக்களுக்கு எந்தவிதமான நலத்திட்டங்களும் வந்து சேரவில்லை என்ற புகாரும் முன்வைக்கப்படுகிறது.
வருகின்ற தேர்தலில் வெற்றியை தழுவ தலித்துகளின் வாக்குகள் மிக முக்கியம் என்பது சித்தராம்மையாவிற்க்கு நன்றாக தெரியும். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் உருவாக்கிய நலத்திட்டங்கள் அந்த தலித் மக்களை சென்று சேரவில்லை. மாறாக ஹொலேய்ஸ் இன மக்களை மட்டுமே குளிர்வித்துள்ளது. எனவே இவர் மீது
மடிகாஸ் இன மக்களும் கடும் கோபத்திலிருக்கின்றனர்.
திரு. கார்கே அவர்களுக்கு முதல்வர் பதவி மறுக்கப்படுவது குறித்து முதலில் கர்நாடகாவின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே எதிர்ப்பு குரல்கள் எழ துவங்கின. ஆனால், தற்போது திரு. கார்கேவிற்கான அதரவு மாநிலம் முழுவதும் பரவ துவங்கிவிட்டது.
ஆனால் அதிகாரத்திலிருப்பவர்களை மீறி ஏதும் செய்ய முடியாத திரு. கார்கே., அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் மக்களிடம் அண்ணல் அம்பேத்காரின் பெயர் சொல்லி, இது கட்சி மேலிடத்தின் உத்தரவு என்று தப்பித்து கொள்கிறார். பாவம்!! கர்நாடக காங்கிரஸின் மீதுள்ள, தலித் மக்களின் இந்த கோபம் பா.ஜ.க-விற்கு ஆதரவாக மாறுமா என்பது தேர்தல் முடிவுகளில் தெரிந்து விடும்.

Reference : https://www.oneindia.com/india/a-whisper-campaign-by-the-dalits-in-karnataka-which-has-siddaramaiah-worried-2692324.html

Next Story