Top
undefined
Begin typing your search above and press return to search.

அம்மனையும் சிவனையும் விரட்ட வேண்டும், காளியம்மன் கோவிலுக்குள் அத்து மீறி புகுந்து கிறுஸ்த்தவ அடிப்படைவாதிகள் அட்டூழியம்

அம்மனையும் சிவனையும் விரட்ட வேண்டும், காளியம்மன் கோவிலுக்குள் அத்து மீறி புகுந்து கிறுஸ்த்தவ அடிப்படைவாதிகள் அட்டூழியம்

By :

  |  12 May 2018 4:17 AM GMT

சென்னை தாம்பரத்தை அடுத்த சானிடோரியத்தில் உள்ள மலையின் மீது அமைந்துள்ளது பச்சைமலை காளியம்மன் கோவில். இந்த கோவிலுக்குள் திங்களன்று கிறிஸ்தவ மத வெறியர்கள் 30 பேர் அத்து மீறி நுழைந்தனர். பிறகு அங்கு முழங்காலிட்டு ஜபம் செய்தனர்.

அப்போது, அம்மனும் சிவனும் சாத்தன் என்றும், இந்த சாத்தான்களை கர்த்தராகிய ஏசப்பா, இங்கிருந்து விரட்ட வேண்டும் என்றும் ஜெபித்தனர்.


இதை தொடர்ந்து அங்கு வந்த பொது மக்கள், கிறிஸ்தவ மத வெறியர்களை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


சில தினங்களுக்கு முன்,  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில்,  கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண் துறவிகள் அத்து மீறி நுழைந்து, பைபிள் ஓதியதாக புகார் எழுந்தது.


தமிழகத்தில்,  அப்பாவி ஏழை தமிழர்களுக்கு பணத்தை கொடுத்து,  கிறிஸ்தவ மதத்திற்கு மதம் மாற்றி பின்பு அவர்களையே இந்து தமிழர்களுக்கு எதிராக தூண்டி விட்டு,  தமிழர்களிடையே மத வெறியை விதைக்கும் செயல் அதிகரித்து வருகிறது. இதை அரசாங்கமோ அல்லது ஊடகங்களோ சற்றும் கண்டுக்கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


https://www.youtube.com/watch?feature=youtu.be&v=UUBSQgDpwHY&app=desktop
Next Story