Top
undefined
Begin typing your search above and press return to search.

3 ஆண்டுகளில் 1 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்துள்ள அடல் ஓய்வூதிய திட்டம்

3 ஆண்டுகளில் 1 கோடி வாடிக்கையாளர்களை சேர்த்துள்ள அடல் ஓய்வூதிய திட்டம்

By :

  |  16 May 2018 10:28 AM GMT






அடல் ஓய்வூதிய திட்டம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை,  ஒரு கோடி வாடிக்கையாளர்கள் சேர்த்துள்ளதாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) தெரிவித்துள்ளது. அடல் ஓய்வூதிய யோஜனா (APY) மே 2015-இல் தொடங்கப்பட்டது. தற்போதைய சந்தாதாரர் எண்ணிக்கை 1.10 கோடியாக உள்ளது.










இன்று வரை, APY திட்டத்தின் சந்தாதாரர்களிடமிருந்து ₹3,950 கோடி பங்களிப்பு சேகரிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இந்த திட்டத்தின் கீழ், 9.10 சதவிகிதம் வருடாந்திர வளர்ச்சி விகிதம் (CAGR) உருவாக்கப்பட்டுள்ளது.


2015-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் தேதி மத்திய மோடி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இந்த ஓய்வூதியத் திட்டம், தொழிலாளர் தொகுப்பில் 85 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ள அமைப்புசாரா தொழிலாளர்கள் மீது கவனம் செலுத்துகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களின் பங்களிப்பிற்கு ஏற்ப, மாதம் ஒன்றுக்கு ₹1,000 அல்லது₹2,000 - ₹5,000 குறைந்தபட்சம் ஓய்வூதியம் வழங்கப்படும்.


சந்தாதாரரின் மனைவி அல்லது கணவன் கூட ஓய்வூதியத்தை பெற தகுதியுடையவர்.


நாடு முழுவதும், சுமார் 1.60 லட்சம் கிளைகள் உள்ளன. இதில் 20,000 தபால் அலுவலகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கான APY கணக்கு துவக்க சேவைகளை வழங்குகின்றன. APY அணி திரட்டலில் முதல் இடத்தில் உத்தரப் பிரதேசமும் (1,401,631), மூன்றாம் இடத்தில் தமிழகமும் (814,917) உள்ளது குறிப்பிடத்தக்கது.


Reference & Pic Courtesy : https://m.economictimes.com/news/politics-and-nation/atal-pension-yojana-crosses-1-crore-subscribers-in-3-years/amp_articleshow/64175510.cms




Next Story