Top
undefined
Begin typing your search above and press return to search.

காவிரி பிரச்சனையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு - தமிழகத்திற்கு மோடி அரசின் வரப்பிரசாதம்

காவிரி பிரச்சனையில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் காவிரி ஆணையத்திற்கு - தமிழகத்திற்கு மோடி அரசின் வரப்பிரசாதம்

By :

  |  19 May 2018 2:57 AM GMT

கர்நாடகாவில் நடக்கும் அரசியல் பிரச்சனைகளுக்கு இடையே, நூறு ஆண்டுகால காவிரி பிரச்னையை, தமிழகத்திற்கு சாதகமாக, சானக்யமாக தீர்த்து வைத்துள்ளது மோடி அரசு. காவிரி விவகாரத்தில்,  தி.மு.க -காங்கிரஸ் ஆட்சி செய்த காலங்களில், பல தவறுகளை இழைத்து தமிழகத்திற்கு துரோகம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம்,  'காவிரி நீர் மேலாண்மை ஆணையம்' (Cauvery Water Management Authority) என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும், வாரியத்தைவிட ஆணையம் கூடுதல் அதிகாரம் மிக்கதாக இருக்கும் என்பதால் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆணையத்திடம் சம்மந்தப்பட்ட மாநிலங்கள், தங்கள் அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பதையும், தங்களின் நீர்த் தேவை எவ்வளவு என்பதையும் மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் காவிரி நடுவர்மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் நீர் திறந்துவிடப்படும்.
தமிழகத்திற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள வரைவறிக்கையின் விவரங்கள்:
குழுவின் தலைவர், செயலாளர், முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் என்று ஆறு பேரை மத்திய அரசு தேர்வு செய்யும்.
மீதமுள்ள நான்கு பேரும் நீர் பங்கீட்டில் தொடர்புடைய நான்கு மாநிலங்கலான தமிழகம், கர்நாடகா, கேரளம், புதுச்சேரி மாநிலங்களின் பிரதிநிதிகளாக செயல்படுவார்கள். அவர்களை அந்தந்த மாநிலங்களே தேர்வு செய்யும்.
இந்த குழு, 740 டி.எம்.சி தண்ணீரை பகிர்ந்தளிக்கும் பணியை ஒருங்கிணைப்பு முறையில் மேல்பார்வையிட்டு செயல்படுத்தும்.
தண்ணீர் எவ்வளவு உள்ளது, எவ்வளவு திறக்கப்படவேண்டும், எவ்வாறு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பனவற்றை இந்த குழு முடிவு செய்யும்.
இந்த குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராக எந்த மாநிலம் செயல்பட்டாலும், அது குறித்த தகவல்கள் மத்திய அரசிற்கு குழுவால் அனுப்பப்படும்.
மத்திய அரசு, சம்மந்தப்பட்ட மாநிலத்திற்கு வழிமுறைகளை அளிக்கும். இதன்மூலம், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுதல் என்பது முடியாத நிலை ஏற்படுகிறது.
மேலும் இந்த குழுவால் 10 நாட்களுக்கு ஒருமுறை, நீர் இருப்பு, நீர்மட்டம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு, அறிக்கைகளாக மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும். இதுவும் இதற்கு முன்பு நடுவர் மன்றத்தில் அளிக்கப்பட்டிருந்த வழிமுறையே.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு 15 ஆண்டுகள் செல்லும். இவைகளில் மாற்றம் செய்ய இயலாது.
இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் ஆணையத்திடம் இருக்கும்.
ஆணையத்தின் முடிவை மாநில அரசுகள் செயல்படுத்தவில்லை எனில் மத்திய அரசை நாடலாம்.
பல தலைமுறைகளாக,  தமிழக டெல்டா மாவட்டங்களில்,  விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல்,  விவசாயிகள் தற்கொலை செய்து வரும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல தசாப்தங்களாக காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு கர்நாடகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. கர்நாடகத்தில் தற்போது நடக்கும் அரசியல் குழப்பங்களுக்கு நடுவே, மத்திய மோடி அரசும், உச்ச நீதிமன்றமும் கைகோர்த்து தமிழகத்திற்கு சாதகமாக ஆணையத்தை அமைக்க முடிவு செய்துவிட்டது. தற்போது, இந்த தீர்ப்பு, தமிழக விவசாயிகளுக்கு கடவுள் அளிக்கும் வரப்ரசாதமாகவே இருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
References:
Maalai Malar
BBC
Featured Image Credits - Maps of India
Next Story