Top
undefined
Begin typing your search above and press return to search.

ராஜேந்திர சோழன் கால சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு : திராவிட கட்சிகளின் பிடியில் அழியும் தமிழ் பொக்கிஷங்கள்

ராஜேந்திர சோழன் கால சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு : திராவிட கட்சிகளின் பிடியில் அழியும் தமிழ் பொக்கிஷங்கள்

By :

  |  19 May 2018 2:48 PM GMT

கள்ளக்குறிச்சி அருகே உள்ள வீரசோழபுரத்தில், ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட பழமையும் தொன்மையும் வாய்ந்த நறீஸ்வரர் கோவில் உள்ளது. 990 வருடத்திற்கு முன்பு நிர்மாணிக்கப்பட்ட இந்த கோவிலில் இருந்த ஐம்பொன்னாலான திரிபுரந்தகர், திரிபுரசுந்தரி உள்ளிட்ட பழமையும் தொன்மையும் வாய்ந்த 78 சிலைகள் மாயமாகியுள்ளன. அதில் ₹50 லட்சத்திற்கு விற்கப்பட்ட இரு சிலைகள் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகளை 1978-ஆம் ஆண்டு திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் இதுவரை புகார் அளிக்காமல் மெத்தனமாக இருந்தனர். இந்த நிலையில் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் புகார் சென்றதை தொடர்ந்து இந்த சிலை திருட்டு மற்றும் கடத்தல் தொடர்பாக 40 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலைகளை கடத்தி சென்றதில் சிலை கடத்தல் தாதா சுபாஷ் கபூர் மூளையாக செயல்பட்டுள்ளான். அவனது யோசனைப்படி திருடப்பட்ட இரு சிலைகளும் மும்பையில் உள்ள வல்லப பிரகாஷ்சின் இந்தோ நேபாள் ஆர்ட் காலரி மூலம் கலைப்பொருள் என்ற பெயரில் ஹாங்காங் நாட்டிற்கு அனுப்பியதும், அங்கிருந்து லண்டன் சென்று பின்னர் மேன் காட்டன் நகரில் நீல்பெரிஸ்மித் என்ற பொற்கொல்லரை கொண்டு இரு சிலைகளின் சேதங்களும் சரி செய்யப்பட்டு ஒரு செல்வந்தரிடம் ₹50 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.
தமிழக இந்து சமய அற நிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் பராமரிக்கபடவும், பாதுகாக்கபடவும் இல்லை. தமிழ் கலாச்சாரத்தின் பொக்கிஷமான சுவாமி சிலைகள் களவாடப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக, திராவிட கட்சிகளின் ஆட்சியின் பிடியில், பண்டைய தமிழ் பொக்கிஷங்கள் அழிந்து வருகிறது.
கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தும் வெறும் உலோகங்கள் அல்ல. பண்டைய தமிழர்களின் இறை பக்தி, கலை நுணுக்கம், பாரம்பரியம், காலத்தால் அழியாத கட்டட கலை, தமிழர்களின் பொக்கிஷம் என்பதை உணர்ந்தால் மட்டுமே அதன் அருமை அற நிலையத்துறைக்கும் திராவிட அரசியல்வாதிகளுக்கும் புரியும் என்பதில் சந்தேகமில்லை.
Reference & Pic Courtesy : Polimer
Next Story