Top
undefined
Begin typing your search above and press return to search.

நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பாலியல் ரீதியாக விமர்சித்த தி.மு.க ஆதரவாளர்

நடிகை கஸ்தூரியை ட்விட்டரில் பாலியல் ரீதியாக விமர்சித்த தி.மு.க ஆதரவாளர்

By :

  |  20 May 2018 10:19 AM GMT

நடிகை கஸ்தூரி,  இலங்கையில் நடந்த தமிழர்கள் இன படுகொலையை நினைவுகூரும் விதமாக,  ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அவர் அந்த பதிவில் தெரிவித்தது,
"விழுந்தோம் இழந்தோம் எழுவோம்
மடிந்தோம் மறவோம் மன்னியோம்.
சரிந்தோம், மீண்டு  நிமிர்வோம்
சரித்திரம்  மீண்டும் படைப்போம்....
பீறிட்டு சிந்திய ரத்தத்தின் வெப்பத்தில்
வீறிட்டு பிறந்தோர் வீரர்கள் புதிதாய்
போரிட்டு தொலைந்தோர் போன பாதையில்
தேரிட்டு  செல்லுமோர்  நாளுண்டு நாளையில்.
கைகோர்ப்போம் ! நம்பிக்கைக்கோற்போம் !
#May18TamilGenocide  #NeverForget #NeverGiveUp"
https://twitter.com/KasthuriShankar/status/997363761844436992
இந்த கருத்தில் நடிகை கஸ்தூரி அவர்கள், தி.மு.க-வை விமர்சித்தோ அல்லது அரசியல்வாதிகளை விமர்சித்தோ எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பிதாக நினைத்து கொண்டு, தி.மு.க ஆதரவாளர் ஒருவர், நடிகை கஸ்தூரியை மிக மோசமாக பாலியல் ரீதியாக விமர்சித்துள்ளார்.



 அந்த தி.மு.க ஆதரவாளர், "ஏன் படுத்தவன் காசு கொடுக்காமல் போய் விட்டானா" என்று மிகவும் கீழ்த்தரமாக, பாலியல் ரீதியாக விமர்சித்துள்ளார்.


அந்த நபரின் ட்விட்டர் Profile படமாக, தி.மு.க தலைவர் திரு.கருணாநிதி அவர்களின் படத்தை வைத்துள்ளார். கவர் படமாக திமுக செயல் தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களின் புகைப்படத்தை வைத்துள்ளார். இந்த பாலியல் கருத்தை, நடிகை கஸ்தூரி அவர்கள் விமர்சனம் செய்யும் விதமாக, "கழக கண்மணி .  தமிழகத்தின்  தூ!ண்  .  தி தி சொ. ?? " என்று தெரிவித்துள்ளார்.


https://twitter.com/KasthuriShankar/status/998100285116502017?s=19

கடந்த சில ஆண்டுகளாக தி.மு.க தொண்டர்கள், இணையத்தில் பெண்களுக்கு எதிராக தொடுக்கும் பாலியல் ரீதியான வெறுப்புகள் அதிகரித்து வருகிறது. இவ்வளவு ஏன், தன் கட்சியை சேர்ந்த பெண்ணையே கூட காவிரி போராட்டத்தின் போது கரூரில் மானபங்க படுத்தி, அதை எதிர்த்து நியாயம் கேட்டவரை கட்சியை விட்டு வெளியேற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவங்கள் தி.மு.க-வில் பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா என்ற கேள்வியை எழுப்புகின்றது?


Next Story