Top
undefined
Begin typing your search above and press return to search.

உச்சக்கட்ட ஊழலால் உருக்குலைந்த பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து வெளியேறும் மூத்த தலைவர்கள்

உச்சக்கட்ட ஊழலால் உருக்குலைந்த பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி, தொடர்ந்து வெளியேறும் மூத்த தலைவர்கள்

By :

  |  21 May 2018 9:54 AM GMT

2017 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஜலந்தர் கன்டோன்மென்ட் ஆம் ஆத்மி வேட்பாளர் H.S.வலியா மற்றும் ஷாட்கோடின் ஆம் ஆத்மியின் மூத்த தலைவர் கலோனல் C.D.காம்போஜ் ஆகியோர் சிரோன்மணி அகாலி தல்லில் சேர்ந்தனர். H.S.வலியா, அவருடைய பிராந்தியத்தில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டி வைத்துள்ளார்.
சிரோன்மணி அகாலி தலில் அனைத்து சமூக மக்களையும் அரவணைத்து கொள்ளும் கொள்கைகளினால் ஈர்க்கப்பட்டு, அக்கட்சியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்தார், வலியா. "ஆம் ஆத்மி கட்சி நல்ல கருத்தியலை ஊக்கப்படுத்தியதால் நான் அக்கட்சியில் சேர்ந்தேன். ஆனால் கட்சி முற்றிலும் ஊழல் நிறைந்ததாகிவிட்டது. பஞ்சாபிகள் மற்றும் அவர்களது பிரச்சினைகளைப் பற்றி கவலைப்படவில்லை. மேலும், உச்சக்கட்ட சர்வாதிகார குணம் கொண்ட தலைவரால் டெல்லியிலிருந்து ஆம் ஆத்மி இயக்கப்படுகிறது", என்று டெல்லி முதல்வரை சூசகமாக சாடினார் வலியா.
வலியாவும் நிபந்தனையற்ற முறையில் சிரோன்மணி அகாலி தலில் ஒரு "படைவீரர்" ஆக பணியாற்றுவார் என்று தெளிவுபடுத்தினார். வலியாவை வரவேற்கும் வகையில், சிரோன்மணி அகாலி தல் தலைவர் சுகீபிர் சிங் பாதல் கூறுகையில், இந்த இளம் தலைவர் ஒரு குறுகிய கால கட்டத்தில் பெரிய அரசியல் பலத்தை பெருக்கியுள்ளதாகவும், ஜலந்தரில் சிரோன்மணி அகாலி தலுக்கு ஒரு மிக பெரிய சொத்தாகவும் விளங்குவார் என்றும் கூறினார்.
Reference & Pic Courtesy : Indian Express
Next Story