Top
undefined
Begin typing your search above and press return to search.

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - வாடிகன் மீது படிந்துள்ள மிகப்பெரிய கறை

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் - வாடிகன் மீது படிந்துள்ள மிகப்பெரிய கறை

By :

  |  21 May 2018 10:14 AM GMT

கார்டினல் பெல் என்ற மூத்த கிறிஸ்திவ பாதிரியார் 76 வயதானவர். வாடிகனின் நிதித் துறையில்  தலைமை பொறுப்பை வகிப்பவர். போப் ஆண்டவருக்குப் பிறகு வாட்டிகனின் மூன்றாவது மிக முக்கிய அதிகாரியாக இருந்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் பல மூத்த பதவிகளை அவர் வகித்துள்ளார். சிட்னி மற்றும் மெல்போர்னின் பேராயரான இவர் 2014-ஆம் ஆண்டு வாட்டிகனின் திருச்சபைக்கு நியமிக்கப்பட்டார். குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பிரச்சனைகளை கையாள்வதற்காக போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்ட ஒன்பது பாதிரியார்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் உலகையே அதிரவைக்கும் விதமாக தொடர் பாலியல் குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய போலீசாரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் குற்றஞ்சாட்டப்பட்டார் கார்டினல் பெல். 2016-ஆம் ஆண்டு, இவர், மெல்போர்ன் மற்றும் சிட்னியின் ஆர்ச்சியோடேசேஸின் தலைவராக இருந்த போது, பாதிரியர்களால் நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்குகளை தவறாக கையாண்டதாக, "Royal Commission Into Institutional Responses to Child Sexual Abuse" என்ற கமிஷனால் குற்றம் சாட்டப்பட்டார். ஏனெனில், பாதிரியார் கார்டினல் பெல் தான் மத குருவாக இருந்த கால கட்டத்திலிருந்தே பாலியல் வன்கொடுமைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மெல்போர்ன் அருகிலுள்ள பால்ராட் நகரத்தில் 1960-களில் இருந்து குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. குடும்பங்களை இழந்தவர்கள், பெற்றோர்களை இழந்து போதைக்கு அடிமையான குழந்தைகள் மற்றும் தற்கொலைக்கு முயன்றவர்கள் என அனைவரும் கிறிஸ்தவ பாதிரியார்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், 1960 முதல் 1980 வரை, ஜெரால்டு ரிட்ஸ்டேல் என்ற பாதிரியாரால் 65 பள்ளி குழந்தைகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்கள். அதன் பிறகு அந்த பாதிரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆஸ்திரேலியாவின் ABC நெட்ஒர்க்கில் பணி புரியும், லூயிஸ் மில்லிகன் என்பவர் எழுதிய ‘Cardinal: The Rise and Fall of George Pell’, புத்தகம் ஆஸ்திரேலியா போலீசாரை வழக்கு பதிவு செய்ய தூண்டியுள்ளது. பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளானவர்களை அந்த புத்தகத்தின் ஆசிரியர் ஒரு வருடத்திற்கும் மேலாக நேர்காணல் செய்து வருகிறார். இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, கிறிஸ்தவ பாதிரியர்களால் நடத்தப்படும்  பாலியல் வன்கொடுமைகளை தடுக்க ரோமன் கத்தோலிக்க தேவாலயம் தவறி விட்டதாக, பாதிரியார் ஜார்ஜ் பெல் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது வாடிகன் மீதும் கிறிஸ்தவ மதத்தின் மீதும் படிந்துள்ள மிகப்பெரிய கறை. இதற்கு வாடிகன் தேவாலயமும் போப் ஆண்டவரும் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், இந்த செய்தி எந்த தமிழக ஊடகங்களிலும் செய்தியாக்கப்படவே இல்லை என்பதும் மதசார்புடன் இயங்கி வருவதும், இவர்கள் உண்மை செய்திகளை மக்களுக்கு எடுத்து செல்லும் நோக்கில் தான் செயல்பட்டு வருகிறார்களா என்ற சந்தேகத்தை தமிழக மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
Next Story