Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகாவில் பா.ஜ.க பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஒலி நாடா போலியானது : காங்கிரஸ் MLA கடும் கண்டனம்

கர்நாடகாவில் பா.ஜ.க பேரம் பேசியதாக வெளியிடப்பட்ட ஒலி நாடா போலியானது : காங்கிரஸ் MLA கடும் கண்டனம்

By :

  |  21 May 2018 10:00 AM GMT

கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிந்த பிறகு, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க விலைக்கு வாங்குவதாக குற்றம் சாட்டியது, காங்கிரஸ். இதன் பிறகு, காங்கிரஸ் MLA-க்களிடம், பா.ஜ.க-வினர் பேரம் பேசுவதாக காங்கிரஸால் ஒலி நாடா வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாடா "போலி" என்று காங்கிரஸ் MLA சிவராம் ஹெப்பார் கூறியுள்ளார். ஹெப்பார் மனைவிக்கு ரூ.15 கோடி லஞ்சம் வழங்குவதாகவும் ஹெப்பார் பா.ஜ.க-விற்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் அந்த ஒலி நாடாவில் பதிவிடப்பட்டிருந்தது.
ஆனால் இவை அனைத்தும், "போலி மற்றும் கற்பனை செய்யப்பட்டது" என்று சனிக்கிழமை காங்கிரஸ் MLA ஹெப்பார், தனது முகநூலில் தெரிவித்துள்ளார். ஆடியோ கிளிப்பிங்கில் உள்ள பெண்ணின் குரல் அவருடைய மனைவியல்ல என்றும் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களுக்காக அத்தகைய போலி ஒலி நாடாவை  வெளியிட்டவர்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இது போன்ற பொய் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மீது சுமத்தி அதில் அரசியல் ஆதாயம் தேடும் அளவிற்கு கர்நாடக காங்கிரஸ் கட்சியினர் தரம் கெட்டு விட்டதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக்கொள்ளப்படுகிறது.
Pic Courtesy - Republic
Next Story