Top
undefined
Begin typing your search above and press return to search.

திருடு போகிறதா திருப்பதி பெருமாளின் நகைகள்? நடப்பது என்ன?

திருடு போகிறதா திருப்பதி பெருமாளின் நகைகள்? நடப்பது என்ன?

By :

  |  23 May 2018 6:47 AM GMT

சமீபத்தில் வெளியிடப்பட்ட திருமலை தேவஸ்தானத்தின் முறைகேடுகள் அதிர்ச்சி அளிக்க கூடியவை. ரமணா திக்ஷிதுலு, இவர் திருமலையின் தலைமை பூசாரி. கடந்த இருபது வருடங்களாக திருமலை கோவிலுக்கு சேவை செய்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களாக திருமலை தேவஸ்தானத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக குற்றம் சாட்டியது மிக பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பல அரிய பொக்கிஷங்கள், பெருமாளின் விலை உயர்ந்த நகைகள் மற்றும் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் பணம் சந்திரபாபு நாயுடுவின் அரசால் உபயோகிக்கப் படுகிறது என்று பகிரங்க குற்றம் சாட்டினார்.
திருமலையில் நடந்த பல மாற்றங்கள் சந்தேகத்தை மேலும் பலப்படுத்துவதாக இருக்கிறது.
1. ஆண்டுதோரும் நடக்கும் திருமாலின் ஆபரணங்களின் ஆய்வு மற்றும் தணிக்கை (Annual Public Audit) நிறுத்தப்பட்டது.
2. 1150 A D முதல் இஸ்லாமிய படையிடமிருந்து பாதுகாக்க திருமாலின் நகைகளை பிரசாத சமயலறயில் பதுக்கிவைப்பது வழக்கம். சமீப காலமாக இந்த சமையலறையில் அடிக்கடி தேடுதல் பணிகள் நடக்கிறது.
3. தேவஸ்தானத்தின் பல பொறுப்புகளில் இந்து அல்லாத மற்ற மதத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்துக்களின் புண்ணிய ஷேத்திரத்தில் ஒன்றான திருமலையில் மாற்று மதத்தினரை நியமிக்க அவசியம் என்ன என்ற குழப்பம் எழுகிறது.
4. ராஜ் பிங்க் எனப்படும் 37.3 காரட் வைரத்தால் ஆனா பெருமாளின் மிக அரிதிலும் அரிய நகையும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்த அரிய வைரம் பக்தர்கள் போடும் காணிக்கை காசுகளால் சேதமடைந்து உடைந்து போனது என்று மூத்த போலீஸ் அதிகாரி தன் ஆய்வு அறிக்கையில் கூறியிருந்தார். ஆனால் அமெரிக்காவின் Sotheby's எனப்படும் பிரபல ஏல நிறுவனத்தால் இந்த அரிய வைரம் ஏலம் விடப்பட்டது. அந்த நிறுவனத்தில் கையில் எப்படி திருமாலின் நகை சென்றது என்ற கேள்வி எழுகிறது.
5. திருமலையின் பணத்தில் பல அதிகாரிகள் விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் வீடுகள் வாங்குகின்றனர் என்ற குற்றச்சாட்டும் இருக்கின்றது.
6. சோழ, பல்லவ, விஜயநகர மன்னர்கள் அளித்த நகைகளும் சர்ச்சையில் சிக்கியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு இன்னும் திருமலை தேவஸ்தானத்திலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை. சந்திரபாபு நாயுடுவின் அரசு அளித்த விளக்கமும் திருப்திகரமாக இல்லை. துணை முதலமைச்சர் அளித்த அறிக்கையில் தலைமை பூசாரியை எச்சரிச்சதை தவிர, குற்றச்சாட்டுகளுக்கு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. திருமலையின் நிர்வாக அதிகாரி, தேவைப்பட்டால் அனைத்து நகைகளையும் காண்பிக்க தயார் என்று கூறியுள்ளார். போலி நகைகள் காண்பிக்கப்படாது என்பதில் என்ன நிச்சயம்? இந்த பிரசத்தி பெற்ற மாணிக்கங்கள் மற்றும் வைரங்களை தரம் சரி பார்க்கவே பல நிபுணர்கள் தேவை. இவர் வைரங்களும், மாணிக்கங்களும் எப்படி பக்தர்கள் போடும் காணிக்கை காசுகளால் உடையும் என்ற விளக்கம் அளிக்கவில்லை. நாயுடுவின் அரசு, தலைமை பூசாரியை தண்டிப்பதற்காக அவசரமாக பூசாரிகளின் ஓய்வு வயதை மாற்றி அவரை நீக்கியுள்ளது.
இது போன்ற முறைகேடுகள் அனைத்து இந்து கோவில்களிலும் நடக்கிறது. இஸ்லாமிய மன்னர்கள், ஆங்கிலேயர்கள் பல அரிய சிலைகள் மற்றும் நகைகளை கொள்ளையடித்து தங்கள் நாட்டின் அருங்காட்சியகத்தில் வைத்தனர். இதை இப்பொழுது இருக்கும் சில அரசியல்வாதிகள் பின்பற்றுகின்றனர். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபட்டால் அனைவரும் மிகக் கடுமையையாக தண்டிக்கபட வேண்டும்.
Next Story