Top
undefined
Begin typing your search above and press return to search.

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தஞ்சை சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தல் : திராவிட கட்சி ஆட்சிகளில் தொடரும் தமிழகத்தின் கலை சீரழிவு

நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த தஞ்சை சிலைகள் அமெரிக்காவுக்கு கடத்தல் : திராவிட கட்சி ஆட்சிகளில் தொடரும் தமிழகத்தின் கலை சீரழிவு

By :

  |  26 May 2018 11:13 AM GMT

சமீபத்தில் ராஜேந்திர சோழன் கால சிலைகள் அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டு பிடிக்கப்பட்டதை பார்த்தோம். (http://kathironline.in/2018/05/19/rajendrachozhan/) இப்பொழுது மேலும் அதிர்ச்சி தரக்கூடிய தகவலாக தஞ்சையை சேர்ந்த விலை மதிப்புள்ள பழைமை வாய்ந்த பல சிலைகள் அமெரிக்காவிற்கு கடத்தப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1974-ம் ஆண்டு கொல்கத்தா விமான நிலையத்தில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட நான்கு நடராஜர் சிலைகள் பிடிபட்டது. அதில் ஒரு சிலை தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலில் இருந்து கடத்தப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடத்தப்பட்ட நடராஜர் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி கோவில் ஆய்வாளர் சிலை கடத்தல் பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், வல்லம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி மற்றும் போலீசார், கைலாசநாதர் கோவிலுக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சிலைகள் குறித்து 3 மணி நேரம் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு நடராஜர் சிலை போலியானது என்று கண்டறிந்தனர். இது குறித்து விசாரணை செய்ததில் 44 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான சிலையை மாற்றி மோசடி செய்திருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த சிலை தான் கொல்கத்தா விமான நிலையத்தில் பிடிப்பட்டு தற்போது அமெரிக்காவில் இருப்பது தெரிய வந்துள்ளது. அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி பொன்மாணிக்கவேல் உறுதி அளித்துள்ளார்.
பண்டை தமிழர்களின் பொக்கிஷமான, கலை நயம் மிக்க சிலைகள் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது, திராவிட கட்சிகள் தமிழர்களின் பண்பாட்டை, கலாச்சாரத்தை திட்டமிட்டு அழிக்கும் செயலா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
Reference Courtesy : Maalaimalar
Pic Courtest: Deccan Chronicle
Next Story