Top
undefined
Begin typing your search above and press return to search.

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சென்னை ரசிகர்கள்: தடைகளை தகர்த்தெறிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

காவிரி மேலாண்மை வாரிய போராட்டம் என்ற பெயரில் ஏமாற்றப்பட்ட சென்னை ரசிகர்கள்: தடைகளை தகர்த்தெறிந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி

By :

  |  27 May 2018 6:38 PM GMT

கடந்த இரண்டு ஆண்டுகளாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி IPL-இல் பங்குக்கொள்ளவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி தலைமையில் மீண்டும் களமிறங்கியது. இதனைத் தொடர்ந்து சென்னை ரசிகர்கள் பெரிதும் உற்சாகத்தில் திளைத்தனர். ஆனால், சென்னை ரசிகர்களை சோகத்தில் தள்ளும் வகையில்,  போராட்டம் உருவெடுத்தது.

காவிரி மேலாண்மை வாரியத்தின் பெயரில் நடைபெற்ற போராட்டம், தமிழக அரசியல் வாதிகளின் தூண்டுதலால் IPL எதிர்ப்பு போராட்டமாக உருவெடுத்தது. சென்னையில் IPL நடைபெற்றால், மக்களின் மன நிலை மாறிவிடும் என்று கூறி, அரசியல்வாதிகள் மற்றும் தமிழக திரைத்துறையினர், தமிழக மக்களை போராட்ட மன நிலையில் வைத்திருக்க எண்ணினர். சென்னையில் நடைபெற்ற ஒரு போட்டியை எதிர்த்து நடந்த போராட்டத்தில், ரசிகர்கள் தாக்கப்பட்டனர், பெண் ரசிகர்கள் தகாத வார்த்தைகளுக்கு ஆளானார்கள். போட்டி நடைபெற்ற போது, வீரர்களை நோக்கி செருப்பு வீசப்பட்டது. இவைகள் எல்லாம் சென்னை ரசிகர்களை வெறுப்பில் தள்ளியது.


பிறகு, எந்த போட்டியும் சென்னையில் நடைபெறாது என்ற அறிவிப்பு வந்தது. அறிவிப்பு வந்த சில தினங்களில், காவிரி மேலாண்மை வாரிய போராட்டமும் கைவிடப்பட்டது. இவை அனைத்தும், தி.மு.க தலைமையின் சொந்தங்களால் நடத்தப்படும் சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆதரவான நிலைபாடா என்ற கேள்வி சமூக வலைத்தளங்களில் பொது மக்களால் எழுப்பப்பட்டது.


IPL போட்டிகள் சென்னையில் நடைபெற்றிருந்தால் தமிழ் ரசிகர்கள் கோடை விடுமுறையை குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் உற்சாகமாக கொண்டாடியிருப்பர். மேலும் சேப்பாக்கம் சுற்றியுள்ள சிறு, குறு வியாபாரிகளும் பயன் பெற்றிருப்பர். ஆனால், அவைகள் நடக்கவில்லை. ஆனால், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்கள் வெளிவரத் துவங்கின. காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவும் வெகு விமர்சியாக நடைபெற்றது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.


எனினும் மனம் தளராத சென்னை ரசிகர்கள், போட்டி நடக்கும் மாநிலங்களுக்கெல்லாம் பயணம் செய்து போட்டியை நேரில் காண ஆர்வம் காட்டினர். இது சென்னை அணியையும் உற்சாகப்படுத்தியது. ரசிகர்கள் எதிர்பார்த்தவாரே, சென்னை அணியும், ஹைதராபாத் அணியும் இறுதி போட்டிக்கு முன்னேறியது. இறுதி போட்டியில், தோனி தலைமையிலான சென்னை அணி, டாஸ் வென்று, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி நிதானமாக விளையாடியது.


20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது.  179 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்கோடு சென்னை அணி களமிறங்கியது. 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் அடித்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது சென்னை சூப்பர் கிங்ஸ்.


IPL எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்த அரசியல் கட்சிகளுக்கும் தமிழக திரைத்துறையினர்க்கும் செருப்படி கொடுத்தார் போல், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தி.மு.க சொந்தங்களின் சன் ரைசெர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றிருப்பது, சென்னை ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. "பொறுமை கடலினும் பெரிது" என்ற தமிழ் பண்பை கொண்ட சென்னை ரசிகர்களுக்கு  இந்த வெற்றி நிச்சயமாக பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் சென்னை ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியுடன் கலந்த வாழ்த்துக்கள்.

Next Story