Top
undefined
Begin typing your search above and press return to search.

போலி தகவல்களையும், மீம்ஸையும் நித்தமும் பரப்பும் தமிழ் போராளிகள்

போலி தகவல்களையும், மீம்ஸையும் நித்தமும் பரப்பும் தமிழ் போராளிகள்

By :

  |  27 May 2018 7:13 PM GMT

தமிழ் நாட்டில் உள்ள போலி தமிழ் உணர்வாளர்களும், தேசியவாதிகளும் சில வருடங்களாக தங்களின் சுயநலத்திற்காக அனைத்து பிரச்சனைகளையும் அவர்களுக்கு சாதகமாக மாற்றுவதற்கு பொய்களை பரப்பி வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் மற்ற மாநிலங்களிலும், தேசங்கிலும் நடந்த வன்முறை சம்பவங்களின் புகைப்படங்களை பரப்பி, இது தூத்துக்குடியில் காவல்துறை செய்த அராஜகம் என்ற பொய்யை பரப்பி வருகின்றனர். காவல்த்துறை துப்பாக்கி சூடு நடத்தியதால், அதை அடித்தளமாக வைத்து தவறான புகைப்படங்கள் மூலம் பொய்யை பரப்புகின்றனர்.
இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் தூத்துக்குடியில் கடுமையாக காவல்த்துறையால்  தாக்கப்பட்டதாக பொய்யான பதிவுகளை பரப்பப்பட்டன. இந்த பதிவை பார்த்து உண்மை என்று நம்பி உணர்ச்சியடைந்த அப்பாவி மக்கள் காவல்த்துறையை வசைப்பாடுகிறார்கள், கண்டிக்கிறார்கள். இது நாளடைவில் படிப்படியாக காவல்த்துறை எதிர்ப்பு மற்றும் வெறுப்பாக மாறுகிறது.
இந்த புகைப்படம் எங்கே உள்ளது என்று இணையதளத்தில் தேடி பார்த்தால், அது வியட்நாம் தேசத்தில் இருக்கும் ஒரு குழந்தையோடது என்று தெரியவந்துள்ளது.
பொய்யான பதிவு:

இந்த சம்பவம் வியட்நாம் தேசத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரம்:

இந்த ஆதாரம் இருக்கும் இணைப்பை இங்கு பார்க்கலாம்:
https://vtc.vn/su-that-vu-be-7-tuoi-bi-cha-duong-danh-nhu-thu-vat-d251809.html

சில நாட்காளுக்கு முன், மேற்கு வங்காளத்தில் நடந்த கலவரத்தின் புகைப்படங்களை தூத்துக்குடியில் காவல்த்துறை நடத்திய அராஜகம் என்று பொய் கூறி சமூகவலைத் தளங்களில் மீம்ஸ் மூலம் பரப்பினர். இந்த பொய்யான மீம்ஸ் மூலம் பிரதமர் மோடி எதிர்ப்பு முழக்கங்களும், காவல்த்துறை எதிர்ப்பு முழக்கங்களும் பரப்பப்படுகின்றன.
பொய்யான 
மீம்:

இந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் 23-ஆம் நாள் ஏப்ரல் மாதத்தில் நடந்தது என்பதற்கான ஆதாரம்:

போலி தமிழ் உணர்வாளர்களும், தமிழ் தேசியவாதிகளும், பிரிவினைவாதிகளும் மோடி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்புவற்காகவும், காவல்த்துறையை அவமானப் படுத்துவதற்காகவும், தமிழக மக்களுக்கு கார்ப்ரேட் கம்பெனிகள் மீது வெறுப்பு உண்டாக்குவதற்காகவும், இந்த பொய்யான போலி மீம்ஸ் மற்றும் பதிவுகளை பரப்பி வருகின்றனர். தூத்துக்குடியில் நடந்த சம்பவத்தின் மூலம் தங்களின் சுய நலத்திற்காக பொய்களை கூறி போலி தமிழ் உணர்வாளர்களும், தமிழ் தேசியவாதிகளும், பிரிவினைவாதிகளும் திசை திருப்புகிறார்கள் என்பதை தமிழக மக்கள் அறிய வேண்டும்.
Next Story