Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆங்கிலேயர்களும் முகாலையர்களும் கூட செய்யாத கொடுமையை தெலுங்கு தேச கட்சி திருப்பதியில் செய்து வருகிறதா? என்ன தான் இந்த திருப்பதி பிரச்சனை?

ஆங்கிலேயர்களும் முகாலையர்களும் கூட செய்யாத கொடுமையை தெலுங்கு தேச கட்சி திருப்பதியில் செய்து வருகிறதா? என்ன தான் இந்த திருப்பதி பிரச்சனை?

By :

  |  27 May 2018 11:17 AM GMT

ஆங்கிலேயர்களும் முகாலையர்களும் கூட செய்யாத கொடுமையை தெலுங்கு தேச கட்சியின் அரசாங்கம் திருப்பதியில் செய்து வருகிறது என்று ஒரு ட்விட்டர் வாசி பகிரங்க குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அவை பின்வருமாறு.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாகத்தின் மீது கோவிலின் பிரதான பூஜகர் ரமண தீக்ஷிதர் பல புகார்களை அளித்துள்ளார். ஆனால் இவை , பா.ஜ.க தூண்டுதலின் பேரில் நடந்திருப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி இதை அரசியலாக்க முயல்கிறது. இதனை தொடர்ந்து பல தரப்பட்ட கருத்துகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
ட்விட்டரில் தினகர் என்பவர் பகிர்ந்துள்ள கருத்துகளின் தொகுப்பு பின் வருமாறு. இவை கேள்வி பதில் பாணியில் அமைந்துள்ளது.
ரமண தீக்ஷிதருக்கு என்ன தேவை?
மரியாதையும் மதிப்பும்.
தெலுங்கு தேச கட்சியின் அரசாங்கம் இந்த பிரச்சனையை எப்படி உருவகப்படுத்தியுள்ளது?
அர்ச்சகர்களை போராட தூண்டுகிறது பா.ஜ.க.
ரமண தீக்ஷிதர் யார் மீது குற்றம் சாட்டினார்?

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மீது.
இந்த குற்றச்சாட்டிற்கு எதிர் வினை ஆற்றியது யார்?
தெலுங்கு தேசம் கட்சி.
எப்போது ஆரம்பித்த சர்ச்சை இது?
6 அல்லது 8 மாதங்களுக்கு முன்பு
எதற்காக இந்த சண்டை ஆரம்பித்தது?
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஊழியர்கள், கோவில் பூஜைகள் எப்போது செய்ய வேண்டும் என்பதை தீர்மானிக்க துவங்கினர். இது அர்ச்சகர்களை வெறுப்பில் தள்ளியது.
ஊழியர்களின் தவறான நடத்தைக்கு ஏதேனும் உதாரணம் இருக்கிறதா?
VVIP-க்கள் நிறைய பேர் வர ஆரம்பித்ததால் சுப்ரபாத சேனையை விடியகாலை 2 மணிக்கு நடத்த வேண்டும் என அர்ச்சகர்களுக்கு ஊழியர்கள் உத்தரவிட்டனர்.
எதற்காக அர்ச்சகர்கள் வெறுப்படைந்தனர்?
ஆகம விதிகளின் படி கோவிலில் இருக்கும் தெய்வம் உயிருள்ள மஹாராஜாவைப் போல. ஒரு மஹாராஜாவிற்கு கொடுக்கப்படும் அனைத்து மரியாதைகளும் தெய்வத்திற்கு கொடுக்க வேண்டும். மஹாராஜாவை பார்க்க வருகிறார்கள் என்பதற்காக மஹாராஜாவை விடிகாலை 2 மணிக்கு எழுப்ப முடியுமா?
ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் கொடுப்பதில் என்ன சண்டை?
ஆகம விதிகளின் படி ஸ்வாமிக்கு சில நெய்வேத்தியங்கள் படைக்கப் பட வேண்டும். ஆனால் சரியான நெய்வேத்தியங்களை ஊழியர்கள் அர்ச்சகர்களுக்கு வழங்கவில்லை. இது மேலும் அர்ச்சகர்களை கோபத்தில் ஆழ்த்தியது.
வருகை பதிவேட்டில்(Attendance Register) என்ன பிரச்சனை?
சில ஊழியர்கள், அர்ச்சகர்கள் கோவிலுக்கு வரும் நேரத்தையும் திரும்பும் நேரத்தையும் பதிவு செய்ய ஆரம்பித்தனர். பிறகு அர்ச்சகர்களை கட்டாயப்படுத்தி பதிவேட்டில் கையெழுத்திட வற்புறுத்தினர். இது முன்னெப்போதும் இல்லாத நடைமுறை. எனவே அர்ச்சகர்கள் ஊழியர்களையே, தாங்கள் வரும் நேரத்தை பார்த்து  பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். இதை ஊழியர்கள் ஏற்க மறுத்தனர், அர்ச்சகர்களிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர்.
ஊழியர்கள் தொடர்ந்து அர்ச்சகர்களை பழி வாங்கும் நோக்குடன் திருமலையில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு செல்லும்படி உத்தரவிட்டனர். வேறு கோவிலுக்கு செல்ல வேண்டியதை அந்தந்த நாள் காலையில் தான் தெரிவித்தனர். இது அர்ச்சகர்களிடம் குழப்பத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியது.
ரமண தீக்ஷிதரிடம் கார் மற்றும் வீடு இருக்கிறதே ?

பிராமணர்கள் ஏழைகளாகவே இருக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக இருக்கிறது. 1996 வரை மகரிஷி முறை பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அர்ச்சகர்களை வேலைக்காரர்களாக ஆக்கியுள்ளது இந்திய அரசாங்கம்.
அர்ச்சகர்கள் வேலைக்காரர்களாக இருக்க கூடாதா?
இருக்கவே கூடாது. அர்ச்சகர்களுக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அளிக்கப்பட வேண்டும். ஏனெனில் கடவுள் சேவைக்காக பல தியாகங்களை செய்து தங்களை புனிதப் படுத்தி கொள்கிறார்கள்.
தெலுங்கு தேச கட்சியின் அரசாங்கம் நிதானம் இழக்கிறதா?
ஆம். இது மிகவும் எளிதாக தீர்த்துவைக்கப்பட கூடிய மதிப்பு மரியாதையை சார்ந்த விஷயம். சரியான தலைமை இல்லாததால் பெரிதுப்படுத்தப்பட்டுள்ளது.
சந்திரபாபு நாயுடுவின் அரசாங்கம் இந்த சர்ச்சையை அகங்காரமாக எடுத்துக்கொண்டதா?
ஆம். திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் இந்த விஷயத்தை அகங்காரமாக எடுத்துக்கொண்டனர். அர்ச்சகர்களை வேலைக்காரர்களாக எண்ணிக்கொண்டனர்.
65 வயதான அர்ச்சகர்களுக்கு ஓய்வு அளிப்பது முட்டாள் தனமான நடவடிக்கையா?
ஆம். இது அர்ச்சகர்களுக்கு எதிராக பழிவாங்கும் நோக்குடன் செயல்படுத்தப்பட்டது.
எதற்காக 65 வயது ஓய்வு என்பது முட்டாள் தனமானது?
அர்ச்சகர்களாக சேவை புரியும் வருடங்கள் அதிகமாக, அதிகமாக அதற்கான மதிப்பு கூடும். எனவே அர்ச்சகர்கள் தங்களால் இயன்ற அளவுக்கு சேவை புரிவதற்கு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும்.
திருப்பதி தேவஸ்தான ஊழியர்களின் அடிப்படை புரிதல் தான் என்ன?
ஊழியர்கள் மற்றும் அரசாங்கத்தை பொறுத்த வரை திருமலை கோவில் சேவைகள்  ஒரு மதசார்பற்ற பதவி என்று நினைத்துள்ளனர். கோவிலின் அடிப்படை புரிதலே தவறாக உள்ளது. ஆங்கிலேயர்களும் முகாலையர்களும் கூட இதை செய்யவில்லை. ஆனால் மதசார்பபற்ற அரசு வயதை காரணம் காட்டி பரம்பரை பரம்பரையாக திருமலையானுக்கு சேவை செய்து வரும் அர்ச்சகரை பணியை விட்டு நிறுத்துவது மிகவும் மோசமானதாக இருக்கிறது.
ரமண தீக்ஷிதர் முன்னாள் ஒருங்கிணைந்த ஆந்திர காங்கிரஸ் முதல்வர் YSR ராஜசேகர் ரெட்டி வீட்டில் ஹோமம் செய்தாரே?
இன்றைய உலகத்தில் முதலமைச்சரும் ராஜாவிற்கு இணையானவர். ஹோமம் செய்வதற்கு ஒரு ராஜா அர்ச்சகரை வேண்டினால் ஹோமம் செய்து தர வேண்டியது அர்ச்சகரின் கடமை. இப்போது சந்திரபாபு நாயுடு ஹோமம் செய்யுமாறு ரமண தீக்ஷிதரிடம் விண்ணப்பித்தால் சந்திரபாபு நாயுடுவிற்கும் செய்து தருவார்.
இந்த சர்ச்சையை எப்படி தீர்த்து வைப்பது?
IVR கிருஷ்ணா ராவ் போன்ற சிலர் ரமண தீக்ஷிதரிடம் பேசி இதை தீர்த்து வைக்க முடியும். ஆனால் திருப்பதி தேவஸ்தானம் அந்த உறவையெல்லாம் துண்டித்து விட்டது. திருமலை குறித்தும் அர்ச்சகர்களின் உரிமை பற்றியும் அக்கறை கொண்டவர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களை வைத்து இந்த சர்ச்சையை எளிதாக தீர்த்து விடலாம்.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பு: பகிரப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் தினகர்(@pdinakar) என்பவரின் ட்விட்டர் பதிவுகளை தொகுத்து வழங்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்த பகுதியும் கதிர் குழுமத்தின் கருத்துக்கள் இல்லை.
Pic Credits - Republic.
Next Story