Top
undefined
Begin typing your search above and press return to search.

"சீமானின் உரையை கேட்கவே பயங்கரமாக உள்ளது" சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

சீமானின் உரையை கேட்கவே பயங்கரமாக உள்ளது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கருத்து

By :

  |  28 May 2018 3:19 PM GMT

நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் கட்சி தொண்டர்களுக்கும் கடந்த 19-ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் மோதல் ஏற்பட்டது. இரு கட்சி தொண்டர்களும் தங்களது தலைவர்கள், சீமான் மற்றும் வைகோவை வரவேற்க அங்கு வந்துள்ளனர். இந்த இரு குழுக்களுக்கும் இடையிலான மோதலில் பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவம் தொடர்பாக 6 ம.தி.மு.க தொண்டர்கள் மீதும், 11 நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த வாரம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கதிர்காமலம் அருகே ஒரு அங்கீகரிக்கப்படாத கூட்டத்தில் பங்கேற்றதற்காகவும் சீமான் பதிவு செய்யப்பட்டுள்ளார். இந்த திருச்சி விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தின் விசாரணை மனு சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
வழக்கு விசாரணையில் நீதிபதி கிருஷ்ணவள்ளி, கடந்த கால தலைவர்களின் பேச்சு அறிவினை தூண்டுவதாக இருக்கும் என்றும், ஆனால் இப்பொழுது சீமான் போன்றோர்களின் பேச்சு பயங்கரமாக உள்ளது என்றும் கருத்து தெரிவித்துள்ளார். சீமான் மக்கள் உணர்ச்சியை தூண்டி அரசியல் சுய நன்மைகள் தேடுகிறார் என்றும் கூறியுள்ளார். சீமான் போன்றோர் பேசிவிட்டு ஏ.சி அறைக்கு சென்று விடுகிறார்கள் என்றும் ஆனால் பாதிப்பிற்கு உள்ளாகுவாது அவர்கள் பேச்சால் தாக்கம் அடையும் அப்பாவி தொண்டர்கள் என்றும் கூறியுள்ளார்.
இந்த கடுமையான வார்த்தைகளை ஒரு உயர் நீதிமன்றம் நீதிபதி கூறுவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் நிலவி வரும் சூழலை சரியாக கூறியுள்ளார் நீதிபதி கிருஷ்ணவள்ளி. சீமான் போன்றவர்கள் தங்களின் அரசியல் லாபத்திற்காக, அப்பாவி மக்களின் உணர்வுகளை தூண்டி வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது. நீதிபதி கிருஷ்ணவள்ளியின் வார்த்தைகளை உணர்ந்து, அப்பாவி தொண்டர்கள் சீமான் போன்றவர்களின்  உண்மை முகத்தை உணர வேண்டும்.
Next Story