Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆர்.எஸ்.எஸ் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப், அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

ஆர்.எஸ்.எஸ் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பிரணாப், அதிர்ச்சியில் காங்கிரஸ் கட்சி!

By :

  |  29 May 2018 9:53 AM GMT

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகேர்ஜீ, ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்(ஆர்.எஸ்.எஸ்) அமைப்பின் மூன்றாம் ஆண்டு பயிற்சி முகாமிற்கு தலைமை விருந்தினராக ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் நாக்பூருக்கு வருகை தர இருக்கிறார். இந்த விழா வரும் ஜூன் மாதம் 7-ஆம் தேதி  நடைபெற உள்ளது. இந்த செய்தி ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஒருவராலும், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்தின் மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகேர்ஜீ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆவார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாட்டில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் தேவையில்லாமல் ஆர்.எஸ்.எஸ் மேல் குற்றம் சாட்டு வரும் இச்சமயத்தில், பிரணாப் முகேர்ஜீ ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் விழாவிற்கு செல்வது, காங்கிரஸ் கட்சிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரணாப் முகேர்ஜீ, இந்திய தேசத்தின் நிதி அமைச்சராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்ஸின் எதிர்மறையான சிந்தனையியல் அமைப்பில் இருந்து வாழ்க்கையில் உயரத்தை அடைந்த தலைவர், ஆர்.எஸ்.எஸ் நடத்தும் விழாவிற்கு தலைமை தாங்குவது, முன்னாள் ஜனாதிபதி ஆர்.எஸ்.எஸ் மீது வைத்துள்ள மதிப்பை காட்டுகிறது.
இது ஆர்.எஸ்.எஸ் பொய்யாக போற்றப்படும் விதத்திற்கும் உண்மைக்கும் நீண்ட இடைவெளி உள்ளது என்பதை மக்களுக்கு உணர்த்துகிறது. முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகேர்ஜீ இந்த விழாவிற்கு தலைமை தாங்குவதன் மூலம் பொய் பதிவுகளை படித்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பைபற்றி தவறான முறையில் அறிந்திருக்கும் மக்களின் சிந்தனைகளை மறுபரிசீலனை செய்ய வைக்கும்.
பிரணாப் முகேர்ஜீ தன்னுடைய ஜனாதிபதி பதவி முடிவு அடைவதற்கு சில வாரங்களுக்குள் முன், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்களை ஜனாதிபதி மாளிகை ராஷ்ட்ரபதி பவனிற்கு விருந்தினராக அழைத்து, அவருடன் உணவு உண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pic Credits - Rightlog
Next Story