Top
undefined
Begin typing your search above and press return to search.

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் மூடப்படுமா ? சுற்றுச்சூழலை நாசமாக்கும் நாசகார தோல் தொழிற்சாலைகள்!

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து ஆம்பூர் தோல் தொழிற்சாலைகள் மூடப்படுமா ? சுற்றுச்சூழலை நாசமாக்கும் நாசகார தோல் தொழிற்சாலைகள்!

By :

  |  30 May 2018 2:14 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி நடந்த போராட்டத்தை அடுத்து, தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியுள்ளது. ஆனால் போராட்டத்தில் நடந்த உயிரிழப்புகள் ஈடு செய்ய முடியாதவை. ஸ்டெர்லைட் ஆலைக்கு சற்றும் சளைக்காத வகையில் உயிரிழப்புகளையும், சுற்றுச்சூழல் சீர்கேடையும் செய்து வருகின்றன, வேலூர், ஆம்பூர் பகுதிகளை சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகள்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மிட்டாளம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே தனியார் தோல் பதனிடும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. கடந்த மார்ச் மாதம், இந்த தொழிற்சாலையில், தொழிலாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது,  இவர்கள், நீண்ட நேரம் வெளியே வராததால் சந்தேகமடைந்த சக தொழிலாளர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது, கழிவுநீர் தொட்டியில் 3 தொழிலாளர்களும் மயங்கி நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், அவர்களை மீட்க முயன்றபோது 3 பேரும் விஷவாயு தாக்கியதில் உயிரிழந்தது தெரியவந்தது.


விசாரணையில் உயிரிழந்த நபர்கள், கீழ்மிட்டாளம் புதுமனை பகுதியைச் சேர்ந்த செல்வம் (25), பந்தேரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோதண்டன் (25), ஆம்பூர் அடுத்த அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் (41) ஆகியோர் என்பது தெரியவந்தது.


ஆம்பூர் அருகேயுள்ள பெரியவரிகம் ஏரி 350 ஏக்கர் பரப்பளவை கொண்ட ஏரியாகும். இந்த ஏரியினை மக்கள் குடிநீருக்காகவும் கால்நடைகளுக்காகவும் பயன்படுத்தி வருகின்றனர். தோல் தொழிற்சாலைகளால் மூட்டை மூட்டையாக ஏரியில் தோல் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில வாரங்களுக்கு முன், நீர் மாசடைந்து ஏரியில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக தோல் தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.


தொடக்கத்தில் ஸ்டெர்லைட் ஆலையிலும்  இது போன்று அசம்பாவிதங்கள் நடைபெற்றன. பிறகு, போராட்டம் கையிலெடுக்கப்பட்டது. பிறகு, தமிழகத்தையே மிகுந்த துயரத்தில் ஆழ்த்திய துப்பாக்கி சூடு வரை சென்றைடைந்து கடைசியாக ஆலை மூடப்பட்டது. இதிலிருந்து பாடம் கற்று, தமிழக அரசு முன்னதாகவே சுதாரித்து கொண்டு ஆம்பூர் தோல் தொழிற்சாலைகளை மூடுமா என்ற கேள்வி பொது மக்களிடையே எழுந்துள்ளது.


Pic Credits - DT Next.


Inputs - The Hindu & One India.

Next Story