Top
undefined
Begin typing your search above and press return to search.

தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு ₹2.5 கோடி வரை மானியம் - பா.ஜ.க மூத்த தலைவர் C.P.ராதாகிருஷ்ணனின் அதிரடி முயற்சி

தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு ₹2.5 கோடி வரை மானியம் - பா.ஜ.க மூத்த தலைவர் C.P.ராதாகிருஷ்ணனின் அதிரடி முயற்சி

By :

  |  30 May 2018 2:08 AM GMT

பொள்ளாச்சியில் தென்னை நார் உற்பத்தியில் பல நடுத்தர வர்க்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி மற்றும் உடுமலை பகுதியில் வேளாண் பரப்பில், தென்னை சாகுபடி மட்டுமே, 80 சதவீதம் உள்ளது. தேங்காய் வர்த்தகம், கொப்பரை உற்பத்தி, சீமாறு, தடுக்கு, பதநீர், கருப்பட்டி உற்பத்தி அதிகமாக உள்ளது. தேங்காய் மட்டையை மூலப்பொருளாக கொண்டு இயங்கும், தென்னை நார் தொழிற்சாலைகளும் அதிகமாக உள்ளன. பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில், 750-க்கும் மேற்பட்ட தென்னை நார் உற்பத்தி நிறுவனங்களிலுருந்து  தயாரிக்கப்படும் தென்னை நார், வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்நிலையில், தென்னை நார் தொழில் துவங்கவும்; தொழிலை மேம்படுத்தவும் மத்திய கயிறு வாரியம் பல்வேறு திட்டங்கள் அறிவித்து மானிய உதவி வழங்குகிறது. புதியதாக தொழில் துவங்குவோருக்கு அதிகபட்சமாக ₹6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 'காயர் உஜ்ஜமி யோஜனா', திட்டத்தின் கீழ், வங்கி கடனுடன் கூடிய மானியம், முதலீட்டுக் கடன், ₹10 லட்சம் வரை வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம், தொழில் துவங்குவோர் இயந்திரம் வாங்குதல் உள்ளிட்ட பணிக்கு இந்த நிதி உதவியாக இருந்தது. மானிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தென்னை நார் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது.


தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு உதவிக்கரம் அளிக்கும் வகையில், ₹2.5 கோடி வரை மானியம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த கயிறு வாரியம் முடிவு செய்தது. இதற்கான கருத்துரு தயார் செய்யப்பட்டு, ₹2.5 கோடி மானியம் வழங்கும் திட்டம் குறித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.


கயிறு வாரிய தலைவரும், பா.ஜ.க-வின் மூத்த தலைவருமான, திரு.C.P ராதாகிருஷ்ணன் கயிறு வாரியத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றவுடன் கடந்த சில ஆண்டுகளாக அதிரடியாக செயல்பட்டு வாரியத்தின் செயல்பாட்டையும், வருமானத்தையும் பன்மடங்கு உயர்த்தியுள்ளார். அவர் தினமலரிடம் கூறுகையில், ''கயிறு வாரியத்தின் மூலமாக, தென்னை நார் தொழில் மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், மானியம் உயர்த்தி வழங்கப்படும். புதிய இயந்திரங்கள் வாங்குவதற்கு இந்த மானியம் வழங்கப்படும். மொத்தம், ₹10 கோடியில் புதிய இயந்திரங்கள் வாங்கினால், 25 சதவீதம் மானியமாக வழங்கப்படும். புதிதாக தொழில் துவங்குபவர்களை வரவேற்கவும்; தென்னை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்கள், நவீன மயமாக்க புதிய இயந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு உதவும் வகையிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இது குறித்து மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது, நிர்வாக அனுமதி பெறப்பட்டு, நிதி அனுமதிக்காக உள்ளது. அனுமதி கிடைத்ததும் விரைவில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் தென்னை நார் உற்பத்தியாளர்களுக்கு கைகொடுக்கும்,'' என்றார்.


இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது, பொள்ளாச்சி பகுதியில், தென்னை நார் தொழில் அடுத்த நிலைக்கு முன்னேற்றமடையும் வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் உருவாகியுள்ளது. கயிறு வாரிய தலைவர், பா.ஜ.க-வின், திரு C.P ராதாகிருஷ்ணன் அவர்கள் எடுத்துள்ள இந்த கடும் முயற்சி, தென்னை நார் தொழில் முனைவோரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Next Story