Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை

இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை

By :

  |  4 Jun 2018 10:05 AM GMT

இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட "அக்னி - 5 " என்ற அணு திறன் வாய்ந்த ஏவுகணை ஒடிசா கடற்கரையில் வங்காள விரிகுடாவில் உள்ள அப்துல் கலாம் தீவிலிருந்து செய்யப்பட்ட சோதனை வெற்றியில் முடிந்தது. மற்ற அக்னி ஏவுகணைகளை விட அக்னி - 5 தொழில்நுட்ப ரீதியில் மிக வலிமை வாய்ந்தது என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில் உள்ள ஒரு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த ஏவுகணை பயணிக்கக்கூடிய தூரம் 5,000 முதல் 5,500 கிலோ மீட்டர். அக்னி ஏவுகணைகளில், அக்னி - 1 700 கிலோ மீட்டர், அக்னி - 2 2,000 கிலோ மீட்டர், அக்னி - 3 மற்றும் அக்னி - 4 முறையே 2,500 மற்றும் 3,500 கிலோமீட்டர் பயணிக்க கூடியதாகும். இது அக்னி -5 ஏவுகணையின் ஆறாவது வெற்றிகரமான சோதனை. இதற்கு முன் நடந்த ஐந்து சோதனைகளும் வெற்றி பெற்றது. முதல் சோதனை 2012-ஆம் ஆண்டு நடந்தது.
இந்த ஏவுகணை வானத்திற்கு சென்ற உடன் பூமியை நோக்கி ஈர்ப்பு சக்தியால் மிக வேகமாக வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அக்னி - 5 ஏவுகணை 5,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க முடிவதால், இந்த திறனை கொண்ட நாடுகளின் வரிசையில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் உடன் இந்தியா தற்போது சேர்கிறது.
Next Story