Top
undefined
Begin typing your search above and press return to search.

சாதி வாக்குகளை பெற மறைந்த அரசியல் தலைவரின் இரங்கலுக்கு வாருங்கள் - ராகுல் காந்திக்கு கடிதம்

சாதி வாக்குகளை பெற மறைந்த அரசியல் தலைவரின் இரங்கலுக்கு வாருங்கள் - ராகுல் காந்திக்கு கடிதம்

By :

  |  4 Jun 2018 9:08 AM GMT

மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டபேரவை தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த மாநிலத்தில் கடந்த 15 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி தொடர்ந்து வருகிறது. தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தமாகும் நிலையில் மத்திய பிரதேஷ் காங்கிரஸ் மாநில தலைவராக உள்ள கமல் நாத், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது,
"மறைந்த திரு.சுபாஷ் யாதவ் அவர்கள் மத்திய பிரதேசத்தின் துணை முதல்வராகவும், பிற்படுத்தப்பட்ட வகுப்பின் மிக முக்கிய தலைவராகவும் விளங்கியவர். இவரது இரங்கல் கூட்டம் வருகின்ற ஜூன் 26-ஆம் நாள், பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது. மத்திய பிரதேஷ் மாநிலத்தில் OBC வகுப்பினரின் மக்கள் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலும் இந்த இரங்கல் கூட்டத்திற்கு பெரும் திரளான மக்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது.
மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரம் தற்போது சூடு பிடித்து இருப்பதால், நிமாத் மால்வா பகுதிகளில் உள்ள 61 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்த இரங்கல் கூட்டம், முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. எனவே, இந்த நிகழ்ச்சியில் தாங்கள் பங்கு பெற வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்", என்று எழுதியுள்ளார்.


இந்த அதிகாரப்பூர்வ கடிதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி மத வேறுபாடுகளை கடந்து அரசியல் செய்வதாக தினமும் கூக்குரல் இடும், காங்கிரஸ் கட்சி, ஒரு குறிப்பிட்ட சாதியின் ஆதிக்கத்தை அவரது இரங்கள் கூட்டத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய முயல்வது வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதிலும், ஒரு இரங்கல் கூட்டத்தை பயன்படுத்தி அரசியல் செய்ய நினைப்பது மேலும் கொடுமை. இந்த விஷயத்தை, சற்றும் தயக்கமோ, வருத்தமோ இல்லாமல் அதிகார பூர்வமாக ஒரு கடிதத்தில் எழுதியிருப்பது காங்கிரஸ் கட்சி நம் நாட்டில் காலம் காலமாக செய்து குளிர்காய்ந்த சாதி அரசியலின் வெளிபாடு.


Next Story