Top
undefined
Begin typing your search above and press return to search.

வழி தவறி சென்னை வந்த மாணவிக்கு கோவை செல்ல விமான டிக்கெட் எடுத்து அனுப்பிய காலை நடைபயிற்சி நண்பர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்

வழி தவறி சென்னை வந்த மாணவிக்கு கோவை செல்ல விமான டிக்கெட் எடுத்து அனுப்பிய காலை நடைபயிற்சி நண்பர்கள் - நெகிழ்ச்சி சம்பவம்

By :

  |  4 Jun 2018 9:27 AM GMT

2015-ஆம் ஆண்டு சென்னை கிண்டியில் உள்ள, அண்ணா பல்கலைகழகத்தில், சுமார் 6.30 மணியளவில், ஒரு பெண்மணி தனது மகளுடன், திசையறியாமல் அங்கு உள்ளவர்களிடம் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு இருந்தார். "திருச்சிக்கு அருகில் உள்ள முசிறியை சேர்ந்த மாணவி சுவாதி, பன்னிரெண்டாம் வகுப்பில் 1,017 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். கவுன்சிலிங்கில் பங்கு பெற, கோயமுத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணா அரங்கம் செல்வதற்கு பதிலாக, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தவறாக சென்றுள்ளனர்", என்று பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவரான எம்.சரவணன் கூறினார். கோவையில் காலை 8.30 மணியளவில், கவுன்சிலிங் தொடங்க இருந்த நிலையில், காலை 6.30 மணிக்கு சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் இருந்த, தாயும் மகளும் தங்களது கவுன்சிலிங் நம்பிக்கையை இழந்தனர். உடனடியாக அந்த மாணவிக்கு உதவும் வகையில், அண்ணா பல்கலைகழகத்தை சேர்ந்த முன்னாள் மாணவர்களுள் ஒருவர், மாணவிக்கும் அவரது தாயாருக்கும் காலை உணவை கொண்டு வந்தார். மற்றொருவர், அவர்கள் உடனடியாக கோவை செல்ல விமான டிக்கெட்களைப் பதிவு செய்தார்.

டிக்கெட் செலவு ₹10,500, அண்ணா பல்கலைகழகத்தில் நடை பழகக்கூடிய Twalkers உறுப்பினர்கள் பகிர்ந்து அளிக்க முடிவு செய்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிப்பவர்களில் சிலர், கோவையில் கவுன்சிலிங் நடக்கும் கல்லூரிக்கு தொடர்பு கொண்டு, சுவாதியின் நிலைமையை விளக்கி கூறி, சுவாதிக்கு கூடுதல் நேரம் ஒதுக்குமாறு கேட்டுக்கொண்டனர். பிறகு காலை 10.05 மணிக்கு, சென்னையில் விமானத்தைப் பிடித்து, 11.28 மணிக்கு கோவையில் இறங்கினர் சுவாதியும் அவரது தாயாரும். அடுத்த ஒரு மணி நேரத்தில், சுவாதியின் கையில் அட்மிஷன் லெட்டர் கிடைத்து விட்டது. "இந்த சம்பவமெல்லாம் சற்றும் நம்ப முடியவில்லை, அதிர்ஷ்ட தேவதைகளை போல் எங்களுக்கு எந்த ஒரு ப்ரீதிபலனும் பார்க்காமல் உதவி புரிந்துள்ளனர்" என்று தெரிவித்தார் சுவாதி.


Twalkers உறுப்பினர்கள் அத்துடன் நிறுத்தவில்லை. சுவாதியின் தயாரான தங்கப்பொண்ணுவின் தொலைபேசிக்கு அழைத்து, சுவாதிக்கு அட்மிஷன் கிடைத்ததை உறுதி செய்துக் கொண்டனர். இந்த சம்பவம், அண்ணா பல்கலைகழக வளாகத்தில் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மனித நேயம் அவ்வப்போது இது போன்ற எதிர்பார்க்காத நேரங்களில் மக்களிடையே வெளிப்படுவது அதிசயம் தான்.


Reference & Pic Courtesy: The Hindu 

Next Story