Top
undefined
Begin typing your search above and press return to search.

இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுக்க இருந்த சீக்கிய தலைவர் தாலிபான்களால் துடிக்க துடிக்க சுட்டுக் கொலை!!

இஸ்லாமியர்களுக்கு இப்தார் விருந்து கொடுக்க இருந்த சீக்கிய தலைவர் தாலிபான்களால் துடிக்க துடிக்க சுட்டுக் கொலை!!

By :

  |  4 Jun 2018 9:38 AM GMT

பாகிஸ்தானில் 52 வயதான சீக்கிய தலைவர் சரண்ஜித் சிங், அவருடைய கடையில் சுட்டு கொலை செய்யப்பட்டுளார். "சிங் தனது கடையில் இருந்த போது, கொலையாளி அவரை சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டார்," என காவல்துறை கண்காணிப்பாளர் சதர் ஷுகத் கான் தெரிவித்தார். பாகிஸ்தானில் சிறுபான்மை சீக்கிய சமூகத்தின் நன்கு அறியப்பட்ட தலைவர், சரண்ஜித் சிங், பாகிஸ்தானில் உள்ள தாலிபான்களை வெளிப்படையாக விமர்சித்து வந்தார். மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் பேணி காக்கும் வகையில், இஸ்லாமிய மக்களுக்கு இப்தார் விருந்து அளிக்கப்போவதாக அறிவித்திருந்தார் சிங். இதை பொறுத்துக் கொள்ள முடியாத இஸ்லாமிய மதவெறி பிடித்த தாலிபான்கள், அவரை துடிக்க துடிக்க சுட்டுக் கொன்றுள்ளனர்.
இறந்தவரின் குடும்பம் பல தசாப்தங்களாக பெஷாவரில் வசித்து வருகின்றனர். சிங், நீண்ட காலமாக, தனது கடையை நடத்தி வந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக பாகிஸ்தானில் பல்வேறு பகுதிகளிலும் பல சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடந்த இந்த படுகொலை, பாகிஸ்தானில் உள்ள சீக்கிய சமூகத்தினரிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
பெஷாவரில் வசிக்கும் பெரும்பாலான சீக்கியர்கள், முன்னர் வாழ்ந்து வந்த வெவ்வேறு பழங்குடி பகுதிகளில் இருந்து பெஷாவருக்கு குடிபெயர்ந்து வியாபாரத்தை ஆரம்பித்தனர். இஸ்லாமியர்கள் அல்லாத வேற்று மதத்தவர்களை பாகிஸ்தானில் படுகொலை செய்யும் சம்பவம் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வருவது வேதனைக்குரிய விஷயம்.
Next Story