Top
undefined
Begin typing your search above and press return to search.

கர்நாடகா 38.4% முதலீடுகளை ஈர்க்க, வெறும் 1% முதலீடுகளையே ஈர்த்த தமிழகம் - போராட்டங்களால் முடங்குகிறதா தமிழகம்?

கர்நாடகா 38.4% முதலீடுகளை ஈர்க்க, வெறும் 1% முதலீடுகளையே ஈர்த்த தமிழகம் - போராட்டங்களால் முடங்குகிறதா தமிழகம்?

By :

  |  4 Jun 2018 9:56 AM GMT

கடந்த 2017-ஆம் ஆண்டு, ₹3.95 லட்சம் கோடி நாடு முழுவதும் முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதில், 1% க்கும் குறைவாக, 0.8% மட்டுமே தமிழகம் ஈர்த்துள்ளது. அதாவது, ₹3,131 கோடி மட்டுமே தமிழகத்திற்கு முதலீடாக கிடைத்துள்ளது. 2015-ஆம் ஆண்டு வரை அதிக முதலீடுகளை ஈர்த்த தமிழகம் இன்று மிகவும் பின்தங்கி விட்டது. இதற்கு முக்கிய காரணம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு, தமிழகத்தில் நிகழும் அரசியல் அசாதாரண சூழ்நிலையும், போராட்டங்களுமே என்று கூறப்படுகிறது.
பெரும்பாலான முதலீடுகள், கர்நாடகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு சென்று விட்டது. அதிகப்படியாக, நம் அண்டை மாநிலமான கர்நாடகம், ₹1.52 லட்சம் கோடி ரூபாயை முதலீடாக ஈர்த்துள்ளது. இதில் அதிக முதலீட்டை கண்டது தகவல் தொழில்நுட்பத்துறை. "தமிழகத்திற்கு மிக பெரிய முதலீட்டை கொண்டு வர முடிவு செய்துருந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம், கடைசியில் கை நழுவி அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு சென்று விட்டது", என்று CII-யின் தமிழக சேர்மேன் திரு P. ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
2017-ஆம் ஆண்டை காட்டிலும், இந்த ஆண்டு போராட்டங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. மறைந்த முன்னாள் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்கள் ஆதரித்த நியூட்ரினோ திட்டம் துவங்கி அனைத்து திட்டத்திற்கு எதிராகவும் போராட்டம் நடந்து வருகிறது. இது போன்ற போராட்டங்கள் தமிழகத்திற்கு எந்த ஒரு முதலீட்டையும் ஈர்க்காது என்பது வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இவை தொடர்ந்து கொண்டே இருந்தால், பல லட்சக்கனக்காண தமிழர்கள் தங்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படும். வேலையில்லா திண்டாட்டம் நிறைந்துள்ள தமிழகத்தில் வேலையில் இருப்பவர்களும் தங்கள் வேலையை இழந்தால் அதை எப்படி தமிழகம் சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Inputs - Times of India
Next Story