Top
undefined
Begin typing your search above and press return to search.

100 குழந்தைகளை பெற்றே தீருவேன்: நான்காம் மனைவிக்கு வலை வீசும் பாகிஸ்தானியர்!

100 குழந்தைகளை பெற்றே தீருவேன்: நான்காம் மனைவிக்கு வலை வீசும் பாகிஸ்தானியர்!

By :

  |  5 Jun 2018 12:40 AM GMT

பாகிஸ்தானை சேர்ந்த ஜான் முகமது கில்ஜி என்ற மருத்துவர், 35 குழந்தைகளின் தந்தை ஆவார். 100 குழந்தைகளை பெற்றெடுப்பதற்கான தனது இலக்கை நிறைவேற்ற உறுதியுடன் உள்ளார்.



100 குழந்தைகளை பெற்றுடுப்பதன் மூலம் சொர்க்கத்தில் தனது இடத்தை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறார். ஜான் முகம்மது கில்ஜி ஏற்கனவே மூன்று மனைவிகளை மணந்துள்ளார். நான்காவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய வலை வீசி வருகிறார்.



பழமைவாத இஸ்லாமிய நாடுகளில், Polygamy எனப்படும் பலதார மணம் நடைமுறைக்கு அரிதானது தான். ஆனால் இன்னும் அதிகமாக உள்ளதே நிதர்சனம்.



இஸ்லாமிய மதத்தின் படி, ஆண்கள் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறது. பெண்கள் உரிமை ஆர்வலர் ரபியா ஜகாரியா கூறுகையில், "குரானின் படி, ஒரு ஆண், ஒன்றிற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்யலாம், ஆனால் அனைவருக்கும் சம நீதி வழங்க வேண்டும்." என்று கூறினார்.



ரபியா ஜகாரியாவின் கூற்றுப்படி, "நடைமுறையில் சம நீதி என்பது சாத்தியமற்றது. இதன் காரணமாக பலதார மணம் ஒரு நல்ல விஷயமாக இருக்க முடியாது. இதனால் பாதிக்கப்படுவது பெண்களும் குழந்தைகளுமே" என்று கூறினார்.



முகம்மது கில்ஜி, பாகிஸ்தான் நாளேடான Dawn-இடம் கூறுகையில், "பெரிய குடும்பமே சிறந்தது. இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்களின் எண்ணிகையை அதிகரிப்பவர்கள் நரகத்திற்கு செல்வதில்லை என்று Prophet கூறியுள்ளதால், நான் 100 குழந்தைகளை பெற்றுடுக்க வேண்டும். தேவனுடைய கிருபையினால், நான் சொர்கம் செல்ல என் பிள்ளைகள் எனக்கு உதவுவார்கள்." என்று அவர் கூறினார்.



அவர் சம்பாதியத்தின் மூலம், ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்கிறார். தனது மகன்களுக்கும் மகள்களுக்கும் இடையில் பாகுபாடு பார்ப்பதில்லை. 35 குழந்தைகளில் அவருக்கு ப்ரியமானவர் அவரது மூத்த மகள் ஷாகுப்தா நஸ்ரீன் ஆவார். இவர் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் சில சமயங்களில் தனது குழந்தைகளின் பெயர்களை மறந்துவிடுவதாக ஒப்புக் கொண்டார்.



பாகிஸ்தானிய ஊடகங்களில் இவரது கதை வெளி வந்ததிலிருந்து, சமூக ஊடகங்கள் மூலம், தன்னை திருமணம் செய்து கொள்ள பல பெண்களின் திருமண விருப்ப வெள்ளத்தில் மூழ்கி உள்ளார், முகம்மது கில்ஜி.

Next Story