Top
undefined
Begin typing your search above and press return to search.

2019 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க வியூகம் - #ModiVersusAll

2019 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சந்தர்ப்பவாத கூட்டணியை வீழ்த்த பா.ஜ.க வியூகம் - #ModiVersusAll

By :

  |  5 Jun 2018 6:08 AM GMT


2014 பொதுத் தேர்தலில் மிக பெரிய வெற்றியை பா.ஜ.க ஈட்டியது, பெரும்பான்மையுடன் ஆட்சியையும் அமைத்தது. தொடர்ந்து நடந்த பல மாநில தேர்தல்களிலும் வெற்றியை பெற்று தனது ஆதிக்கத்தை செலுத்தியது. 21 மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்கின்றன. பா.ஜ.க-வின் தொடர் வெற்றியால் கலக்கமடைந்த மாநில காட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணியை அமைத்து இடை தேர்தலில் வெற்றி அடைந்து வருகின்றன. உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க-வை எதிர்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்தன. இந்த கூட்டணியில் நாட்டு நலன் என்று எதுவுமில்லை, அரசியல் காழ்புணர்ச்சி தான் காரணம். இந்த சந்தர்ப்பவாத கூட்டணி மற்ற மாநிலங்களிலும் அமைய வாய்ப்புள்ளது. இந்த சந்தர்ப்பவாத கூட்டணி அனைத்து மாநிலங்களிலும் அமைந்தால் 2019 தேர்தலில் பா.ஜ.க சில இடங்கள் இழக்க நேரிடலாம்.
இதை பற்றி பா.ஜ.க-வின் மூத்த தலைவர் கூறுகையில் "2019 தேர்தலில் பா.ஜ.க பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்றும், அதற்காக வியூகம் அமைக்க பா.ஜ.க மேலிடம் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும், சந்தர்ப்பவாத கூட்டணியை எப்படி எதிர்கொள்வது என்று அனைத்து கூட்டணி கட்சிகளும் ஜூன் 7-ஆம் தேதி பீகாரின் பாட்னாவில் கூடி ஆலோசனை செய்யவுள்ளதாகவும், வங்கத்திலும், ஒடிசாவில் காலூன்ற பா.ஜ.க மிக தீவிரமாக செயல்படவுள்ளது" என்று கூறினார்.
சந்தர்ப்பவாத கூட்டணியால் பா.ஜ.க விற்கு உத்தர பிரதேசத்தில் மட்டும் தான் சில இடங்கள் குறையும். மற்ற மாநிலங்களில் இந்த தாக்கம் குறைவாகத்தான் இருக்கும். 2014 ஆம் ஆண்டு முடிவைவிட 56 இடங்கள் குறைவாக கிடைக்கும். 46 இடங்கள் உத்தர பிரதேசத்தில் மட்டும். இதை ஈடு செய்ய வட கிழக்கு மாநிலத்தின் இடங்களையும், வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களில் சில இடங்களை கைப்பற்றி ஈடு செய்யும். ஆக மொத்தம் எந்த கூட்டணி அமைத்தாலும் அடுத்த தேர்தலிலும் பா.ஜ.க தான் வெற்றி அடையும் என பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது குறித்து செய்தி வெளியிட்டு இருந்தோம்.



Next Story