Top
undefined
Begin typing your search above and press return to search.

ஜெயலலிதா இறுதி நாட்கள் பற்றி சசிகலா மற்றும் டாக்டர்.சிவகுமார் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் அளித்த வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் - நடந்தது என்ன?

ஜெயலலிதா இறுதி நாட்கள் பற்றி சசிகலா மற்றும் டாக்டர்.சிவகுமார் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திடம் அளித்த வாக்குமூலங்களில் கடுமையான முரண்பாடுகள் - நடந்தது என்ன?

By :

  |  5 Jun 2018 4:36 PM GMT

ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. இந்த ஆணையம் பல முக்கிய புள்ளிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை செய்தது. கடைசியாக மார்ச் 14-ஆம் தேதி மருத்துவர் சிவக்குமார் ஆஜராகி அறிக்கை அளித்தார்.
தற்போது சசிகலாவின் அறிக்கையும், மருத்துவர் சிவகுமாரின் அறிக்கையும் வேறு வேறாக இருக்கிறது என்று சி.என்.என் நியூஸ் 18 ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெயலலிதாவின் மருத்துவர் சிவகுமார் 2016-ஆம் வருடம் செப்டம்பர் 22-ஆம் தேதி சசிகலாவிடமிருந்து இரவு 7 மணி அளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அந்த அழைப்பில் ஜெயலலிதாவிற்கு இருமல் மற்றும் காய்ச்சல் இருப்பதாகவும் சசிகலா கூறினார் என்று சிவகுமார் விசாரணை ஆணையத்திடம் கூறியுள்ளார்.
ஆனால் சசிகலாவின் வாக்குமூலத்தில் இந்த தொலைபேசி அழைப்பு பற்றிய ஒரு குறிப்பும் இல்லை. அவர் சிவகுமார் போயஸ் தோட்டத்திற்கு இரவு 9 மணி அளவில் வந்ததாகவும், அந்த சமயத்தில் ஜெயலலிதாவிற்கு காய்ச்சல் குறைந்ததாகவும் கூறியுள்ளார். சசிகலா கூறியதில் அங்கு ஜெயலலிதாவுடன் அவரும் டாக்டர் சிவகுமாரும் தான் இருந்தனர் என்று கூறியுள்ளார். ஆனால் சிவகுமாரோ அங்கு யாரென்றே தெரியாத இரண்டு பணிப்பெண்கள் இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதைத்தவிர ஜெயலலிதா மயங்கி விழுந்த விதத்தை கூறும் போதும் இவர்கள் இருவரின் வாக்குமூலங்கள் மாறுபாடாகவே உள்ளது. சசிகலா கூறுவதின் படி, இரவு 9:30 அளவில் அவர் ஜெயலலிதாவுடன் முதல் மாடியில் இருந்ததாகவும், அப்பொழுது அவர் பற்களை துலக்க குளியலறை சென்றதாகவும், அங்கு அவர் மயக்கமாக உள்ளது என்று சசிகலாவை அழைத்து கட்டிலிற்கு சென்று அமர்ந்த சில நேரத்தில் மயங்கி சசிகலாவின் தோளில் விழுந்தார் என்று கூறியுள்ளார். அவர் மயங்கி விழுந்த சமயத்தில் தான் அப்போது அங்கு வீட்டில் ஏற்கனவே இருந்த சிவகுமார் அந்த அறைக்குள் நுழைந்தார் என்று கூறியுள்ளார்.
ஆனால் சிவகுமார் கூறுவதோ முற்றிலும் வேறு. அவர் வந்த பிறகு ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் இரும்பல் இருந்ததாகவும், ஆனால் ஜெயலலிதா இவரின்(டாக்டர்.சிவகுமார்) துணை வேண்டாம் என்று கூறி இவர் வீட்டிலிருந்து கிளம்பலாம் என்று கூறியதாகவும், ஆனால் அங்கேயே இருந்து விட்டதாகவும் கூறியுள்ளார். பிறகு ஜெயலலிதா தனியாக குளியலறைக்கு பற்களை துலக்க சென்ற போது அவர் தொடர்ந்து இடைவிடாமல் இரும்பியதாகவும், பின் வெளியே வந்தவுடன் அங்கு வந்த சிவகுமார் மற்றும் சசிகலா மேல் விழுந்ததாகவும் கூறினார். அதற்கு பின் அவர் அவசர ஆம்புலன்ஸை வர வைத்ததாகவும் கூறினார்.
சசிகலா ஜெயலலிதாவிற்கு ஆம்புலன்ஸில் இருந்த போதே நினைவு திரும்பி அவர் எங்கே இருக்கிறார் என்பது பற்றி கேட்டறிந்ததாக கூறினார். ஆனால் சிவகுமாரோ, ஜெயலலிதா மருத்துவமனையில் ரத்த மற்றும் மற்ற சோதனைக்கு பிறகு தான் அவ்வாறு கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இதைத்தவிர, சசிகலா கூறுவது படி முதன்மை செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே காத்திருந்ததை ஜெயலலிதா அறிந்திருந்தார் என்று கூறினார். இதற்கு முற்றிலும் மாறாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவிற்கு வெளியே எந்த ஒரு அதிகாரியும் இருந்ததாக சிவகுமாருக்கு நினைவில்லை என்று கூறியுள்ளார்.
சசிகலாவின் வாக்குமூலத்திற்கும், மருத்துவர் சிவகுமாரின் வாக்குமூலத்திற்கும் இத்தனை முரண்பாடுகள் இருப்பது, முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு பற்றி இருக்கும் சந்தேகங்களை மேலும் அதிகரிக்கிறது.
Input Credits - CNN News 18
Picture Credits - Deccan Chronicle
Next Story