Top
undefined
Begin typing your search above and press return to search.

மக்களை தவறாக வழி நடத்துகிறாரா கமல்ஹாசன்?

மக்களை தவறாக வழி நடத்துகிறாரா கமல்ஹாசன்?

By :

  |  5 Jun 2018 12:50 AM GMT

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் போராட்டம் நடத்துவோர்கள் சமூக விரோதி என்றால் அவரும் சமூக விரோதிதான் என்று கூறியுள்ளார். இவ்வாறு கூறுவதால் ரஜினிகாந்த் போராட்டங்களை பற்றி கூறிய கருத்தை கமல்ஹாசன் மறைமுகமாக தாக்கியுள்ளார்.
ஆனால் கமலின் வார்த்தைகளின் மூலம் அவர் ரஜினிகாந்த் கூறிய கருத்தை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. ரஜினிகாந்த் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறவில்லை. அவர் போராட்டத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்களையும், காவல்துறை மேல் கற்களை எறிந்தவர்களையும், கலெக்டர் அலுவலகத்தை தாக்கியவர்களையும், ஸ்டெரிலைட் பணியாளர்களின் குடியிருப்பு இடத்திற்கு தீ வைத்தவர்களையும் தான் சமூக விரோதி என்று கூறினார். இதை தவிர சமூக விரோதிகளிடமிருந்து மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
போராட்டக்காரர்களை சமூக விரோதி என்று ரஜினி கூறாத போது, கமல்ஹாசனிடமிருந்து இப்படி ஒரு வார்த்தை திரித்தலை, ரஜினி கூறியதை புரிந்துக் கொள்ளவில்லை என்று எடுத்துக் கொள்ளலாம், அல்லது ரஜினி கூறியதை புரிந்து கொண்டும் அரசியல் ரீதியாக ரஜினியை எதிர்க்கிறார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.
போராட்டங்களை மக்கள் நிறுத்தக் கூடாது என்றும் கமல் கூறியுள்ளார். தொடர் போராட்டங்களால் தமிழ்நாட்டிற்கு தொழிற்சாலைகளின் முதலீடு குறையும் என்பதும், வேலை வாய்ப்பு குறையும் என்பதும் மிக நிதர்சனமான உண்மை. இதனால் இறுதியில் பாதிப்பிற்கு உள்ளாக்குவது மக்களே. இதை மனதில்கொண்டே ரஜினி தொடர் போராட்டங்கள் தமிழகத்தை சுடுகாடாக மாற்றும் என்று கூறினார்.
இந்த சமயத்தில் கமல் போராட்டங்கள் தொடர வேண்டும் என்று கூறுவது ரஜினியை அரசியல் ரீதியாக எதிர்க்கும் வகையில் மக்களை தவறாக வழிநடத்துகிறாரோ என்ற கேள்வி எழுகிறது.
சமீபத்தில் வெளிவந்திருக்கும் ஆய்வின் படி தமிழகத்தில் முதலீடுகள் தொடர் போராட்டங்களினால் கடுமையாக பாதிக்கப்பட்டு அதலபாதாளத்திற்கு சென்றுள்ளது என்று அறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story