Top
undefined
Begin typing your search above and press return to search.

கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம் - கெயில் திட்டம் கேரளாவிற்கு வளர்ச்சி, தமிழ்நாட்டிற்கு ஆபத்தா ?

கம்யூனிஸ்டுகளின் இரட்டை வேடம் - கெயில் திட்டம் கேரளாவிற்கு வளர்ச்சி, தமிழ்நாட்டிற்கு ஆபத்தா ?

By :

  |  6 Jun 2018 6:49 AM GMT

கேரளம் மற்றும் தமிழ்நாடு மாநிலங்களின் இடையே எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தை இந்திய எரிவாயு ஆணையம் (கெயில்) ₹3,200 கோடி செலவில் செயல்படுத்துகிறது. இந்த திட்டத்திற்காக கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கொச்சியிலிருந்து பெங்களூரு வரை 871 கி.மீ  குழாய்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. அதில் 310 கி.மீ தமிழகத்தின் வழியாக அமைக்கப்பட உள்ளது. 15 கிராமங்கள் கோவையிலும், 22 கிராமங்கள் திருப்பூரிலும், 16 கிராமங்கள் ஈரோடிலும், 9 கிராமங்கள் நாமக்கல்லிலும், 29 கிராமங்கள் சேலத்திலும், 27 கிராமங்கள் தர்மபுரியிலும், 18 கிராமங்கள் கிருஷ்ணகிரியிலும் எரிவாயு குழாய்கள் அமைக்கப்படும்.
கெயில் நிறுவனத்தின் இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி போராட்டங்கள் வெடித்தன. சம்பந்தபட்ட அதிகாரிகள் யாரையும் அழைத்து திட்டத்தை பற்றி கேட்காமல் இந்த திட்டத்தை அரசியல் காரணத்திற்காக அரசியல் கட்சிகள் இத்திட்டத்தை எதிர்த்து வருகின்றன. தமிழக அரசும் தடை விதித்தது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் சென்றது கெயில் நிறுவனம். உயர் நீதிமன்றம் தடையை நீக்கியது. தமிழக அரசு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் திட்டத்திற்கான தடையை நீக்கியது. எனினும் அரசின் ஒத்துழைப்பில்லாததால் திட்டம் சரியாக நடைமுறை படுத்தப்படவில்லை.

இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்ததன. முக்கியமாக தமிழகத்தில் கம்யூனிஸ்ட் காட்சிகள் திட்டத்தை மிக தீவிரமாக எதிர்த்தது. விவசாய நிலத்தின் வழியாக இந்த திட்டம் செயல்படுத்த கூடாது என்பது அவர்களின் வாதம். இதே கட்சியை சார்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் அரசு கேரளாவில் இந்த திட்டத்தை வெற்றிகரமாக அமல்படுத்தி தனது ஆட்சியின் இரண்டாண்டு  சாதனையாக நாளிதழில் விளம்பரம் செய்கிறது. ஒரே திட்டம் எப்படி கேரளாவிற்கு வளர்ச்சி என்றும், தமிழகத்திற்கு ஆபத்து என்றும் ஒரே கட்சியின் நிலைப்பாடாக இருக்க முடியும் என்ற கேள்வி மக்களிடம் எழாமல் இல்லை. முற்றிலும் அரசியல் காரணத்திற்காக மக்கள் விரோத கம்யூனிஸ்ட் காட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன என்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம்.
ஆரம்பத்தில் கேரளாவிலும் எதிர்ப்புகள் எழுந்தாலும், கேரள அரசு மக்களுக்கு திட்டத்தை பற்றி விளக்கி நல்ல முறையில் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அதே போல் தமிழக அரசும் நல்ல முறையில் மக்களிடம் திட்டங்களை எடுத்து செல்ல வேண்டும். திட்டத்தால் ஏற்படும் மக்களின் பிரச்சனைகளை உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும். இல்லையேல் தமிழகம் போராட்ட பூமியாக மாறும். வளர்ச்சி என்பதே கேள்விக்குறியாக அமையும்.
Next Story