Top
undefined
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையத்தில் இலவச நீட் பயிற்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி

பா.ஜ.க வானதி சீனிவாசனின் மக்கள் சேவை மையத்தில் இலவச நீட் பயிற்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி

By :

  |  6 Jun 2018 7:48 AM GMT

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் அவர்கள், கோவையில்  நடத்தி வரும் மக்கள் சேவை மையம் சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கடந்து ஆண்டு முதல் இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டடு வருகிறது. நீட் தேர்வுக்கு தேவையான பாடப்புத்தகங்களும் இம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது வெளிவந்துள்ள நீட் முடிவுகளில் இந்த மாணவர்களில், 2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அக்டேபர் 7, 2017-ஆம் ஆண்டு இந்த இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
https://twitter.com/VanathiBJP/status/916549963173175298
நீட் பயிற்சி மட்டும் அல்லாமல் நீட் தேர்வுக்கு தேவையான பயிற்சி புத்தகங்களும் இந்த இலவச பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
https://twitter.com/VanathiBJP/status/985473979283521539
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருந்த நிலையில் மார்ச் 1-ஆம் தேதி மக்கள் சேவை மையத்தின் நீட் இலவச பயிற்சி வகுப்பில் பயின்ற கவுசல்யா என்ற மாணவியின் இல்லத்திற்கு சென்று கவுசல்யாவுக்கு இனிப்பு கொடுத்து, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்கவும், நீட் தேர்வில் முதன்மை மதிப்பெண் பெறவும் வாழ்த்து தெரிவித்த வானதி சீனிவாசன் இந்த தகவலை தன் டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். தற்போது இந்த மாணவி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/VanathiBJP/status/969075108919705600
இந்நிலையில் ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தனது மக்கள் சேவை மையத்தில் பயின்ற மாணவிகளில், இரண்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார் வானதி சீனிவாசன். அவரின் கீச்சு "கோவையில் எமது மக்கள் சேவை மையம் மூலமாக நடத்தப்பட்ட இலவச நீட் பயிற்சி வகுப்பில் கௌசல்யா, கயல்விழி ஆகிய மாணவிகள் இன்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். அவர்களுக்கு மக்கள் சேவை மையம் மூலம் எனது மனமார்ந்த வாழ்த்துகள். என் வாழ்வில், மனதிற்கு நிறைவான நிகழ்வு இது."
https://twitter.com/VanathiBJP/status/1003606728418529283
இதைத் தொடர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவிகள் கௌசல்யா மற்றும் கயல்விழி ஆகியோரை வானதி சீனிவாசன் கோவையில் நேரில் வாழ்த்தினார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் வானதி சீனிவாசன் இந்த நிகழ்வே பிறந்தநாளுக்கு இறைவன் அளித்த பிறந்தநாள் பரிசாக கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.
https://twitter.com/VanathiBJP/status/1004265247006314496
28 வாரங்கள் தொடர்ந்து ஏழை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளித்த மக்கள் சேவை மையத்திற்கு நமது பாராட்டுகள். இதே போல், மற்ற அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமிழக  மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் ஊக்கம் அளித்தால் நம் மாணவர்கள் நிச்சயம் சாதனை புரிவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்வு இருக்கிறது.
Next Story