Top
undefined
Begin typing your search above and press return to search.

நீண்டகாலமாக கோரப்படும் கோவை - பெங்களூரு புதிய விரைவு ரயில் நாளை முதல்! கோவை மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசு

நீண்டகாலமாக கோரப்படும் கோவை - பெங்களூரு புதிய விரைவு ரயில் நாளை முதல்! கோவை மக்களுக்கு பிரதமர் மோடியின் பரிசு

By :

  |  7 Jun 2018 6:42 AM GMT

கோவை - பெங்களூர் இடையே, திங்கள் கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்களுக்கு இயங்க இருக்கிறது புதிய இரண்டடுக்கு உதய் விரைவு ரயில். கோவையில் நாளை நடைபெறும் விழாவில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் மற்றும் ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் ஆகியோர் கொடி அசைத்து, போக்குவரத்தைத் தொடங்கி வைக்கின்றனர். குளிர்சாதன வசதியுடன் கூடிய ஈரடுக்குப் பெட்டிகள் கொண்டது இந்த உதய் விரைவு ரயில். முதல் நாளில் 10:30 AM மணிக்கு, கோவையில் இருந்து புறப்படும் ரயில் மாலை 5.20 PM மணிக்குப் பெங்களூர் சென்றடையும்.

வழக்கமான கால அட்டவணைப்படி கோவையில் காலை 5:45 AM மணிக்குப் புறப்படும் ரயில் பகல் 12.40 PM மணிக்குப் பெங்களூர் சென்று சேரும். இதேபோல் பெங்களூரில் பிற்பகல் 2:15 PM மணிக்குப் புறப்படும் ரயில், இரவு 9:00 PM மணிக்குக் கோவை வந்து சேரும். திருப்பூர், ஈரோடு, சேலம், குப்பம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.இந்த ரயிலுக்கான முன்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மேலும் விவரங்களை படத்தில் காணலாம்.
Next Story