Top
undefined
Begin typing your search above and press return to search.

கிராம மக்களுக்கு உதவி செய்து வந்த இளைஞன் சாதி கலவரத்தில் படுகொலை: சாய்ஸில் விட்ட தமிழக ஊடகங்களும் திராவிட கட்சிகளும்!

கிராம மக்களுக்கு உதவி செய்து வந்த இளைஞன் சாதி கலவரத்தில் படுகொலை: சாய்ஸில் விட்ட தமிழக ஊடகங்களும் திராவிட கட்சிகளும்!

By :

  |  7 Jun 2018 6:33 AM GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள காஞ்சனாபுரம், சமீபத்தில் சாதி கலவரத்தால் ரத்த வெள்ளத்தில் மிதந்தது. இந்த கலவரத்தில் ஷண்முகநாதன் என்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தனது கிராமத்தில் 'பெரிய' மருது என அறியப்பட்ட MBA பட்டதாரி, ஷண்முகநாதன் தனியாக தங்கியிருந்தார். அவரது தந்தை எஸ்.அறிவழகன் உதவி பயிற்சி அலுவலராக, மதுரை அரசு ITI-யில் பணி புரிந்து வருகிறார். தாயார், பள்ளி ஆசிரியராகவும், இளைய சகோதரர், பொறியியல் பட்டதாரியாகவும், மானாமதுறையில் வசித்து வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் நிறுவனத்தில் பணி புரிந்து வந்த ஷண்முகநாதன், தனது வேலையை விட்டுவிட்டு விவசாயம் செய்வதற்காக மீண்டும் கிராமத்திற்கு திரும்பி வந்தார். விவசாயத்தில் வரும் வருமானத்தில் பெரும் பகுதியை வைத்து, கிராமவாசிகள் அனைவருக்கும் உதவி வந்தார் என அவரது நண்பர்கள் சதீஷ் மற்றும் சதாசிவம் கூறுகின்றனர். அவர் 12 ஏக்கர் நிலம் மற்றும் ஒரு டிராக்டர் வைத்திருந்தார். புதுமையாக விவசாயம் செய்வதில் பயிற்சி பெற்று, மற்றவர்களை வழி நடத்தினார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் பருவமழை தொடரவில்லை என்பதால் கிராமத்தில் கிணறுகள் உலர்ந்து போயின. ஷண்முகநாதன் சமீபத்தில் ₹ 2 லட்சம் செலவில் ஒரு கிணறு தோண்டி, தனது நிலம் மட்டுமல்லாமல் மற்ற நிலங்களிலும் பயிரிட உதவினார் என்கிறார் அந்த கிராமவாசி கருப்பையா. கிராமத்து வாசிகளின் மருத்துவ தேவைகளுக்கு முன் நின்று உதவி வந்துள்ளார் ஷண்முகநாதன்.
கிராமத்திலுள்ள குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற ஷண்முகநாதன், அவர்களின் கல்வி செலவுகளையும் பார்த்துக்கொண்டார். மேலும் அவர் கிராமத்து மக்களின் குடிநீர் தேவைகளையும் பார்த்துக்கொண்டார். இப்படிப்பட்ட ஒரு இளைஞனின் படுகொலை, இந்த கிராமத்திற்கே மிகப்பெரிய பேரிழப்பு.
ஆனால் இந்த சாதி கலவரத்தை பற்றி தமிழகத்தின் பிரதான ஊடகங்கள் விவாதம் நடத்தவில்லை. சில ஊடகங்கள் இதை ஒரு சிறிய செய்தியாக வெளியிட்டன. சில ஊடகங்கள் அதைக் கூட செய்யவில்லை. சாதியை ஒழிப்போம், தீண்டாமையை ஒழிப்போம் என்று தினமும் பேசும் திராவிட கட்சியினர், இந்த சம்பவத்துக்கு ஒரு சிறிய கண்டனத்துடன் விட்டுவிட்டனர். ஏனெனில், இந்த கலவரத்திற்கு எதிராக வலிமையாக குரல் கொடுத்தால்,  கலவரத்தை நடத்திய சமூகத்தின் வாக்கு வங்கியை இழக்க நேரிடுமோ என்ற அச்சமா?
Picture & Input Credits - The Hindu
Next Story