Top
undefined
Begin typing your search above and press return to search.

பிரதமர் மோடியின் உடைக்கான செலவுகள் அரசின் பணம் அல்ல- தகவல் அறியும் சட்டம்

பிரதமர் மோடியின் உடைக்கான செலவுகள் அரசின் பணம் அல்ல- தகவல் அறியும் சட்டம்

By :

  |  7 Jun 2018 5:49 AM GMT

சமீபகாலத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் அணியும் உடைகள் குறித்து அடிக்கடி சர்ச்சைகள் எழுகின்றன. எதிர்க்கட்சிகள் மோடி மிக விலை உயர்ந்த உடைகள் அணிவதாகவும், ஒரு நாளில் பல முறை உடைகள் மாற்றுவதாகவும் குற்றம் சாட்டின. இதற்காக மத்திய அரசு கோடிக்கணக்கில் செலவு செய்து வருகிறது என்று எதிர் கட்சிகளும், சமூக ஊடக மீம் பக்கங்களும் தவறான தகவலை பல நாட்களாக மீண்டும் மீண்டும் பரப்பி வருகின்றன. ஆனால் உண்மையில், மோடி அவர்கள் அணியும் உடைகளுக்கான செலவை அரசு ஏற்கவில்லை என்றும், அவரே அந்த செலவை ஏற்றுக்கொள்கிறார் என்று தகவல் அறியும் சட்டம் மூலம் அம்பலம் ஆகியுள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் பொய் என்று மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பிரதமர்கள் அணியும் உடைகளுக்கான செலவை பற்றி அறிய சமூக ஆர்வலர் ஒருவர் கடந்த டிசம்பர் மாதம் தகவல் அறியும் சட்டம் மூலம் பிரதமர் அலுவலகத்திற்கு விண்ணப்பம் செய்தார். வாஜ்பாய் பிரதமராக இருந்த காலம் 1998 முதல் 2004 வரை, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலம் 2004 முதல் 2014 வரை, மோடி பிரதமராக இருந்த காலம் 2014 முதல் 2017 வரை அவர்களின் உடைகளுக்கான செலவு          எவ்வளவு, மற்றும் அந்த செலவை யார் செய்தார்கள் என்று தகவல்கள் அளிக்குமாறு விண்ணப்பம் செய்தார்.
இதற்கு பிரதமர் அலுவலகம் அளித்த பதிலில் - இது தனிப்பட்ட ஒரு நபர் சம்பந்தப்பட்டது. இதுகுறித்து எந்த ஆவணங்களும் இல்லை என்று கூறியுள்ளது. பிரதமரின் உடைகளுக்கான செலவுகள் எதுவும் அரசு கணக்கில் இல்லை. அந்த செலவுகள் அனைத்தும் மோடியே ஏற்றுக்கொள்கிறார் என்று பதில் அனுப்பியுள்ளது. இதன்மூலம் அரசு பணத்தை பிரதமர் அவரின் உடைகளுக்காக செலவு செய்யவில்லை என தெளிவாக தெரிகிறது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் தவிடுபொடி ஆகியுள்ளது.
Next Story