Top
undefined
Begin typing your search above and press return to search.

1337 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி - தமிழக அரசின் திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி!

1337 அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி - தமிழக அரசின் திட்டத்திற்கு மிகப்பெரிய வெற்றி!

By :

  |  7 Jun 2018 6:14 AM GMT

நீட் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்காக தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பயற்சி மையங்கள் மூலம் சிறப்பு பயிற்சி அளித்தது. இந்த பயிற்சியை பெற்று 1,337 தமிழக மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த செய்தியை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜூன் 5-ஆம் தேதி வெளியிட்டார்.
https://twitter.com/KASengottaiyan/status/1003898961248292866
தி.மு.க, இடதுசாரி மற்றும் தமிழ் பிரிவினைவாத இயக்கங்கள் நீட் தேர்வு தமிழக மாணவ மாணவிகளுக்கு மிக கடினமானது என்றும், அவர்களால் தேர்ச்சிப் பெற இயலாது என்றும் அதனால் தமிழக அரசு இதனை எதிர்க்க வேண்டும் என்றும் பேசி வருகின்றனர். இவர்கள் நீட் தேர்வினை பற்றி பொய்யான நம்பிக்கையற்ற குறைகாணும் தகவல்களையும் செய்திகளையும் நித்தமும் பரப்பி வருகின்றனர். இது படிக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது.
இதற்கு நேர்மாறாக, தமிழக அரசின் பயிற்சி திட்டங்கள் மாணவர்களுக்கு நம்பிக்கையை தந்திருக்கிறது. 1,337 அரசுப்பள்ளி மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது இந்த திட்டத்தின் வெற்றியை பிரதிபலிக்கிறது. இந்த பயிற்சி மையங்களில் பயின்ற மாணவ மாணவிகள் நீட் தேர்வில் 10 பேர் 300-க்கும் மேல் மதிப்பெண்களும், 42 பேர் 200 - 299 விகிதத்தில் மதிப்பெண்களும் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் பழைய காலங்களைப் போல் 11-ம் வகுப்பு பாடத்திட்டத்தை புறக்கணித்து 2 ஆண்டுகள் 12-ம் வகுப்பு பாடத்திட்டங்களை பள்ளிகளால் நடத்த இயலாது. 11-ஆம் வகுப்பு பாடங்களை சுத்தமாகவே படிக்காததாலேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வில் தமிழக மாணவர்களால் பெரிதாக வெற்றிப்பெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கல்வித்துறை சீர்திருத்தங்களும், சீரிய நடவடிக்கைகளும் முதல் ஆண்டிலேயே இத்தனை மாணவர்களை தேர்ச்சி அடைய உதவிய பட்சத்தில், வரும் காலங்களில் மேலும் பல மாணவ, மாணவிகளை நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடைய உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
Next Story