Top
undefined
Begin typing your search above and press return to search.

"கடவுளே இல்லை என்பது இந்து மதத்துக்கு மட்டும் தானா?" கனிமொழியை வெளுத்து வாங்கும் இணையவாசிகள்!

கடவுளே இல்லை என்பது இந்து மதத்துக்கு மட்டும் தானா? கனிமொழியை வெளுத்து வாங்கும் இணையவாசிகள்!

By :

  |  7 Jun 2018 6:40 PM GMT

தி.மு.க பாராளமன்ற உறுப்பினரும், தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி அவர்கள், நேற்று, அனைத்து இந்திய முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நடைபெற்ற, ரமலான் நோன்பு விழாவில் பங்கு கொண்டு நோன்பு கஞ்சி குடித்துள்ளார். இதை பெருமையாக தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
அதில், அவர் கூறியுள்ளதாவது, "இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் சார்பாக இன்று சென்னையில் நடைபெற்ற புனித ரமலான் நோன்பு திறக்கும் இஃப்தார் மற்றும் உதவி பொருள்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டபோது..." என்று கூறி, புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/KanimozhiDMK/status/1003994336130883585
இதனைத் தொடர்ந்து கனிமொழிக்கு, நன்றியையும் விமர்சனங்களையும் ட்விட்டர் வாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.

கனிமொழிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அதில்,"சிறுபாண்மையினறுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு சமுக நீதிகாத்த காவலர் எங்கள் தமிழின திராவிட கடவுள் கலைஞர் அவர்களின் தவப்புதல்வி கழக மகளிர் அணி செயலாளர் சகோதரி அவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி", என்று கூறியுள்ளார்.


https://twitter.com/MpMathi2/status/1004004053129367552


"இதற்கு பெயர்தான் மதசார்பற்ற கஞ்சியோ ??" என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


https://twitter.com/vinodh_ra/status/1004056289096286208



வேறொருவர், "கடவுளே இல்லை என்பது இந்த மதத்துக்கு பொருந்தாதோ? ஓ ஓ இந்துக்களை மட்டுமே இழிவு செய்வதே திமுக வழக்கம்..."என்று குறிப்புட்டுள்ளார்.


https://twitter.com/asmoorthi2006/status/1004027743330156544

மற்றொருவர் எழுப்பியுள்ள விமர்சனத்தில், "பகூத்தறிவு கடவுள் மறுப்பு இதல்லாம் கோபாலபுரத்தில் விட்டுவிட்டு வந்திருக்கிங்க போல இதுதான் ராமசாமி கொள்ளையா ????" என்று பதிவிட்டுள்ளார்.



https://twitter.com/Bhairavibhairav/status/1004284444654489600
"பாவம்.... இஸ்லாமியர்களை இன்னும் ஒரு வாக்கு வங்கியாக மட்டுமே நினைத்து வருகிறீர்கள்...." என்று ஒருவர் தனது கருத்தை பதிவிட்டார்.

https://twitter.com/Advgrsureshkuma/status/1004206967970136065

மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் விழாவிற்கு வாருங்கள் என்று ஒருவர் அழைப்பு விடுத்துள்ளார்.


"அக்கா அடுத்த வாரம் மாரியத்தாக்கு கூலுத்தப்போரம் அப்படியை வந்துட்டு போங்க"


https://twitter.com/PandiaRajACP4/status/1004307190113431552

தொடர்ந்து பலரும், தங்கள்  கேள்வியையும் விமர்சனத்தையும் முன் வைத்து வருகின்றனர்.



Next Story