Top
undefined
Begin typing your search above and press return to search.

13 வருட இருளில் இருந்து மீண்ட நக்சல் ஆக்கிரமிப்பு கிராமங்கள், மக்கள் மகிழ்ச்சி!

13 வருட இருளில் இருந்து மீண்ட நக்சல் ஆக்கிரமிப்பு கிராமங்கள், மக்கள் மகிழ்ச்சி!

By :

  |  9 Jun 2018 4:43 AM GMT

“நக்சல்கள் அனத்து வசதிகளயும் அழித்துவிட்டனர்.”
சட்டிஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திலிருக்கும் கிராமவாசி ஒருவர், சின்டல்நர் மற்றும் ஜகர்குண்டா போன்ற கிராமங்களில் மின்சார கட்டமைப்பு வசதிகளை நக்சல்கள் எவ்வாறு அழித்தனர் என்பது குறித்து சொல்கிறார். பாதுகாப்பு படைக்கும் நக்சல்களுக்கும் இடையே நடக்கும் தொடர்ச்சியான அடர்ந்த சண்டைக்கு சுக்மாவும் அதை சுற்றியுள்ள பகுதிகளும் பிரபலமானவை. 2017, ஏப்ரலில் நக்சல்கள் பதுங்கியிருந்து தாக்கியதில் மத்திய ரிசர்வ் காவல் படையின் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
தண்டேவாடா மாவட்டத்தின் அருகிலுள்ள ஜாகர்குன்டா கிராமத்தில் 199 வீடுகள் உள்ளன. அதில் 898 மக்கள் வசிக்கின்றனர். இடதுசாரிகளின் தீவிரவாதத்தால் பெரிதும் பாதிப்புள்ளாகியது இக்கிராமம். இந்த சுற்றுப்பகுதியில் மின்சாரம் பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் இருந்தது. அதன் பின் தற்போது தான் மின்சார சேவை இங்கு மீண்டும் சீரமைக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த சுற்றுபகுதியில் மின்சாரத்தை சீரமைக்கும் பணிகள் கடந்த ஆண்டே துவங்கப்பட்டுவிட்டன.
“பல வருடங்களாக இருளில் தொலைந்திருந்த சிண்டல்நர் & ஜகர்குண்டா கிராமங்கள் மீண்டும் ஒளிபெற போகிறது. இந்த கிராமத்துவாசிகளிடமிருந்து மின்சாரத்தை பறித்திருந்தனர் நக்சல்கள். இந்த பகுதிகளுக்கு அடிப்படை தேவையான சாலை, தொலை தொடர்பு & மின்சாரம் ஆகியவைகளை பெறுவதற்காக இராணுவ வீரர்கள் செய்த தியாகம் எதுவும் வீண் போகாது.” என சட்டிஸ்கரின் முதல்வர் ராமன் சிங் கடந்த ஆண்டு தெரிவித்தார்.
சுக்மா மாவட்டத்திலிருக்கும் சிண்டல்நர் கிராமத்தின் ‘மின்சார கட்டத்துக்கு’ கடந்த ஆண்டே மறு இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் ஜகர்குண்டா வெளிச்சத்தில் மிளிர்வதற்க்கு கடந்த மாதம் வரை காத்திருக்க வேண்டியதாய் இருந்துள்ளது.
Pic & Input Credits - Swarajya
Pic Credits - Economic Times
Next Story