Top
undefined
Begin typing your search above and press return to search.

இருதய நோயாளிகளின் பாரத்தை குறைத்த மத்திய மோடி அரசு

இருதய நோயாளிகளின் பாரத்தை குறைத்த மத்திய மோடி அரசு

By :

  |  9 Jun 2018 4:31 AM GMT

மத்திய மோடி அரசாங்கம் கடந்த சில வருடங்களாக, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை குறைக்க பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில், ஆஞ்சியோபிளாஸ்ட்டி எனப்படும் இருதய அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் விலைகளை பெரும் அளவில் குறைத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி,  "முன்பெல்லாம் இருதய அறுவை சிகிச்சைக்கு ஸ்டென்ட் வாங்குவதற்கு, தங்கள் சொத்துக்களை அடமானம் வைப்பார்கள் ஏழை எளிய மக்கள். ₹2 லட்சமாக இருந்த ஸ்டென்ட் விலைகள் தற்போது, ₹29,000 என குறைந்து உள்ளது", என்று தெரிவித்தார்.
இந்தியாவில் 6 கோடிக்கும் மேல் இருதய நோயாளிகள் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை பெறுபவர்கள் தான். இருதய நோய் சிகிச்சைகளுக்காக பயன்படுத்தப்படும் ஸ்டென்டின் விலை அதிகமாக இருந்தது. விலையைக் குறைப்பது தொடர்பாக பரிசீலிக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியது. மேலும் இருதய நோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், பொருட்களுக்கு கூடுதல் விலை இருப்பதாக ஏராளமான புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து இருதய மருத்துவ ஸ்டென்டுகளின் (டிஇஎஸ்) விலையை ₹28 ஆயிரமாக குறைக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரியையும் சேர்த்து ₹29,285 என்ற விலைக்கு ஸ்டென்டுகள் கிடைக்கும்.
கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறுகையில், "மத்திய அரசு ஸ்டென்ட் விலைகளை பெரும் அளவில் குறைத்துள்ளது. இந்த விலை குறைவு இன்னும் தொடரும்", என்று தெரிவித்தார். இந்த விலை குறைப்பினால், தனியார் மருத்துவமனைகளில், ₹2 லட்சம் வரையில் செலவு ஆகக்கூடிய ஆஞ்சியோபிளாஸ்ட்டி சிகிச்சை தற்போது சில ஆயிரங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சிகிச்சையின் மொத்த செலவும் மத்திய, மாநில அரசுகளின் காப்பீட்டு திட்டத்திற்குள்ளே வந்து விடும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
Next Story