Top
undefined
Begin typing your search above and press return to search.

தாம்பரம் - நெல்லை இடையே முன் பதிவு இல்லாத புதிய விரைவு ரயிலை அறிமுகப்படுத்திய மோடி அரசு: தமிழர்கள் மகிழ்ச்சி 

தாம்பரம் - நெல்லை இடையே முன் பதிவு இல்லாத புதிய விரைவு ரயிலை அறிமுகப்படுத்திய மோடி அரசு: தமிழர்கள் மகிழ்ச்சி 

By :

  |  9 Jun 2018 5:12 PM GMT

சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் அனைத்தும் முன்பதிவு வசதி கொண்ட ரயில்கள் தான். இதனால் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழியும். எனவே முன்பதிவு இல்லாத ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது ஏழை எளிய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அந்த்யோத்யா விரைவு ரயிலின் அறிமுக விழா தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர்கள் ராஜென் கோஹெய்ன், பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு தினசரி சேவையாக இந்தப் புதிய ரயில் இயக்கப்பட்டுள்ளது.
தாம்பரத்தில் இருந்து இரவு 12.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16191), பிற்பகல் 3.30 மணிக்கு நெல்லை சென்றடையும். மறுமார்க்கமாக நெல்லையில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்படும் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (16192), காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
இந்த எக்ஸ்பிரஸ் ரெயில், 16 முன்பதிவில்லா பெட்டிகளை உள்ளடக்கியது ஆகும்.
இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை மற்றும் விருதுநகர் வழியாக இயக்கப்படுகிறது.  தென் மாவட்டங்களை இணைக்கும் இந்த முன்பதிவில்லா ரயில் நிச்சயமாக ஏழை எளிய மக்களுக்கு ஒரு வர பிரசாதமாகவே இருக்கும்.
இதன் மூலம் சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடுத்து மூன்றாவது புதிய முனையமாக தாம்பரம் ரயில் நிலையம் உருவெடுத்துள்ளது.
* This story is edited after a factual error was detected.
Next Story