Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவின் கிராமப்புற சுகாதாரம் தற்போது 85 சதவீதமாக உயர்வு. தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தின் மிகப் பெரிய வெற்றி!

இந்தியாவின் கிராமப்புற சுகாதாரம் தற்போது 85 சதவீதமாக உயர்வு. தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத்) திட்டத்தின் மிகப் பெரிய வெற்றி!

By :

  |  10 Jun 2018 4:14 AM GMT

உலகின் மிகப் பெரிய தூய்மை திட்டமான தூய்மை இந்தியா(ஸ்வச் பாரத் மிஷன்) திட்டத்தின் கீழ் இந்தியாவின் கிராமப்புற சுகாதாரம் தற்போது 85%-ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புற சமூகங்களை அணி திரட்டுவதன் மூலம் கிராமப்புற இந்தியாவில் 7.4 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவாக 3.8 லட்சம் கிராமங்கள் மற்றும் 391 மாவட்டங்கள் ஓபன் டிஃபெஷன் ஃப்ரீ Open Defecation Free  (ODF) என அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறிப்பிடத்தக்க சாதனை, தூய்மை இந்தியா திட்டம் தொடக்க நேரத்தில் இருந்ததை விட இரு மடங்கு சுகாதாரம் அதிகரித்துள்ளது.
6,000 கிராமங்களில் உள்ள 90,000 குடும்பங்களில் நடத்திய சமீபத்திய ஆய்வில், கிராமப்புற இந்தியாவில் கழிப்பறைகளின் பயன்பாடு 93.4%-ஆக காணப்படுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவின் தர கவுன்சில் (Quality Council) நடத்திய இரண்டு ஆய்வுகள், மற்றும் 2016-ஆம் ஆண்டில் தேசிய மாதிரி ஆய்வு அமைப்பு (National Sample Survey Organization) ஆகியவை முறையே 91% மற்றும் 85% கழிப்பறைகளை கிராமப்புற இந்தியா பயன்படுத்தின என தெரியவந்தது. நாட்டில் முந்தைய சுகாதாரத் திட்டங்களுடன் ஒப்பிடுகையில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் மேற்கொள்ளப்பட்ட துப்புரவுக்கான அணுகுமுறையின் வேறுபாடு காரணமாக இந்த வெற்றி அடையப்பட்டது.
தூய்மை இந்தியா திட்டம் ஒரு மக்கள் இயக்கம், ஒரு உண்மையான மக்கள் இயக்கம், மக்களின் பங்கேற்பினால் திட்டத்திற்கு பெரிய வெற்றி கிடைத்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான மக்களுக்கு இந்த திட்டத்தை பற்றி மிக தவறான புரிதல் உள்ளது. இது ஒரு மக்கள் இயக்கம், அரசின் திட்டம் மட்டுமல்ல. அனைவரும் தங்களுடைய இருப்பிடத்தை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க முற்படவேண்டும் அது தான் திட்டத்தின் முக்கிய நோக்கம். அரசும் பல முயற்சிகள் எந்த திட்டத்தில் மேற்கொள்ளும். அதை விட்டு பலர் அசுத்தமான இடத்தை புகைப்படம் எடுத்து இணையத்தில் "Clean India For You" என தவறான புரிதலுடன் பரப்புகின்றனர். அடிமட்டத்தில் நல்ல சுகாதாரிற்காக Behavorial Change ஐ கொண்டுவர அரசு முற்படுகிறது. இதனால் பலரின் வாழ்க்கை வெகுவாக மாற்றம் அடைந்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
Next Story