Top
undefined
Begin typing your search above and press return to search.

#FirstExclusive : கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் அஞ்சல் பணியாளர்களுக்கு முதல் முறையாக மகப்பேறு விடுப்பு - மோடி அரசு அதிரடி

#FirstExclusive : கிராமப்புற அஞ்சல் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு, பெண் அஞ்சல் பணியாளர்களுக்கு  முதல் முறையாக மகப்பேறு விடுப்பு - மோடி அரசு அதிரடி

By :

  |  11 Jun 2018 3:29 AM GMT

அஞ்சல் துறையில் GDS எனப்படும் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 06.06.2018 அன்று ஒப்புதல் அளித்தது.
இந்த ஊதிய உயர்வு காரணமாக இந்தியா முழுவதும் 2.60 லட்சம் கிராம அஞ்சல் பணியாளர்கள் பயன் பெறுவார்கள். தமிழகம் முழுவதும் 21,025 கிராம அஞ்சல் பணியாளர்கள் இதனால் பயன் பெறுவார்கள்.
கிராமின் தக் சேவக்(GDS) எனப்படும் அஞ்சல் துறையின் துறை சாராத பணியாளர்கள் அமைப்பு 150 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. கிராமப் பகுதிகளில் முறையான முழு நேர ஊழியர்களுக்கு அவசியம் இல்லாத நிலையில் அடிப்படை, சிக்கன அஞ்சல் சேவை வழங்க இந்த அமைப்பு தேவைப்பட்டது. 1 லட்சத்து 29 ஆயிரத்து 346 துறை சாராத கிளை அஞ்சல் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. கிராம அஞ்சல் பணியாளர்கள், கிளை அஞ்சல் அதிகாரிகள் ஆகியோரால் இது செயல்பட்டு வருகிறது. மேலும் கிளை அஞ்சல் அதிகாரிகள் அல்லாத கிராம அஞ்சல் பணியாளர்கள், தலைமை அஞ்சல் அலுவலகங்களிலும், துணை அஞ்சல் அலுவலகங்களிலும்  பணியாற்றி வருகிறார்கள். கிராம அஞ்சல் பணியாளர்களைப் பகுதி நேர ஊழியர்களாக, அதாவது நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 மணி நேரம் பணிபுரிவார்கள். இவர்கள் வாழ்வாதாரத்துக்கு வேறு வகைகளிலும் தொழில்கள் மூலமாகவும் வருமானம் ஈட்ட வேண்டிய நிலை இருந்தது. அந்த நிலை தற்போது மோடி அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளது.. இந்தப் பணியாளர்கள் தங்களது 65-வது வயது வரை பணியில் இருப்பார்கள்.
தற்சமயம் 1,29,380 கிளை அலுவலர்கள் இந்தியா முழுவதிலும் பணியாற்றி வருகின்றனர். 2.60 லட்சத்திற்க்கும் மேற்பட்ட GDS-க்கள் இத்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 12,138 தபால் நிலையங்கள் உள்ளன. அதில் 9,304 கிளை தபால் நிலையங்களும் அடங்கும். இவை அனைத்தும் மொத்தமாக 21,025 GDS அலுவலர்களால் கையாளப்படுகிறது.
பிரதமர் மோடி அரசின் வழங்கியுள்ள சலுகைகள்:
TRCA எனப்படும் நேரம் சார்ந்த தொடரும் படிகள், மற்றும் ஊதிய அளவுகள் (SLAB) முறைப்படுத்தப்பட்டுள்ளன. GDS பணியாளர்கள் நிரந்தர பணியாளர்கள் இல்லை என்பதால், தபால் துறை அவர்களின் தினக்கூலியை நேர்த்தியாக வடிவமைக்க கமிஷன் ஒன்றை அமைத்துள்ளது. இவர்களின் சேவை நிபந்தனைகளை நிர்மாணிக்க இதுவரை பல்வேறு அரசுகளால், மொத்தம் 5 கமிட்டிகள்  அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இவர்களின் பரிந்துரைகளுக்கு இணங்க பல மாற்றங்கள் இந்த வரைவினுள் கொண்டுவரப்பட்டுள்ளன.
விரிவாக்கப்படும் தபால் நிலைய சேவைகள்:
தபால் சேவை வாரியத்தின் ஓய்வு பெற்ற உறுப்பினர்,  கமலேஷ் சந்த்ரா-வின் கமிட்டியின் கீழ் 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய அரசுக்கு அறிக்கை ஒன்று சமர்பிக்கப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தில், 12 தபால் நிலைய கடவுசீட்டு சேவை மையங்கள் இதுவரை திறக்கப்பட்டுள்ளன. கிட்டதட்ட 207 மையங்கள் இந்தியா முழுவதும் திறக்கப்பட்டுள்ளன. தபால் நிலையங்கள் என்ற நிலையை தாண்டி ஆதார் இணைப்பு மற்றும் புதுப்பித்தல் சேவைகள் இந்த அலுவலகங்களில் செய்யப்படுகின்றன. தமிழகத்தில் 1,435 தபால் நிலையங்களில் இந்த சேவைகள் வழங்கப்படுகின்றன.தமிழகத்தில் பல்வேறு தபால் நிலையங்களில் 97 ஏடிஎம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 2,617 தபால் நிலைய துறையினுள், 2,545 தபால் நிலையங்கள் உட்சபட்ச வங்கி சேவைகளை செய்யும் களமாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்திய தபால் பேமன்ட் வங்கிகளை நடைமுறைப்படுத்த 37 கிளைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
பணி நேரம்/நிலைகள் அடிப்படையில் வழங்கப்படவுள்ள குறைந்தபட்ச TRCA-க்கள்:
1) நான்கு மணி நேரம் பணிபுரியக்கூடிய, கிளை அஞ்சல் அதிகாரிக்கான குறைந்தபட்ச TRCA ₹12,000 நிர்ணியக்கப்பட்டுள்ளது.
2) நான்கு மணி நேரம் பணிபுரியக்கூடிய, உதவிக் கிளை அஞ்சல் அதிகாரிக்கான TRCA, ₹10,000 நிர்ணியக்கப்பட்டுள்ளது.
3) ஐந்து மணி நேரம் பணிபுரியக்கூடிய, கிளை அஞ்சல் அதிகாரிக்கான குறைந்தபட்ச TRCA ₹14,500 நிர்ணியக்கப்பட்டுள்ளது.
2) ஐந்து மணி நேரம் பணிபுரியக்கூடிய, உதவிக் கிளை அஞ்சல் அதிகாரிக்கான TRCA, ₹12,000 நிர்ணியக்கப்பட்டுள்ளது.
முந்தைய காலங்களில் TRCA-க்கான அதிகபட்ச ஊதிய அதிகரிப்பு சராசரியாக 24% மட்டுமே இருந்துள்ளன. ஆனால் தற்போது மத்திய அரசாங்கம் இதை 56.1% ஆக உயர்த்தியுள்ளது சரித்திர நிகழ்வு. குறைந்தபட்ச ஊதியம் மாதம் ₹10,000 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ₹35,480 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதியதாக "கடினம் மற்றும் ஆபத்து படி" என்று ஒரு படி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதரப்படிகளான அலுவலகப் பராமரிப்புப் படி, ஒருங்கிணைந்த பணிப்படி, ரொக்கம் கொண்டு செல்லுதல் கட்டணம், சைக்கிள் பராமரிப்புப் படி, படகு படி, நிர்ணயிக்கப்பட்ட சட்டப்படியான கட்டணங்கள் ஆகியனவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
கிராம பெண் அஞ்சல் பணியாளர்களுக்கு முதல் முறையாக மகப்பேறு விடுப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. TRCA + அகவிலைப்படி (DA) உடன் கூடிய 180 நாட்கள் அங்கீகரிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு, கிராமப்புற பெண் அஞ்சல் பணியாளர்களுக்கு ஒரு வர பிரசாதம். கிராமப்புற பெண்களின் வளர்ச்சிக்கு, மத்திய மோடி அரசாங்கம் பாடுபடுகிறது என்பதற்கு இது ஒரு சான்று. கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் கருணைத் தொகை ₹60,000/- த்தில் இருந்து ₹1,50,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கிராம அஞ்சல் பணியாளர்களுக்கு அளிக்கப்படும் Severance தொகை ₹60,000 த்தில் இருந்து ₹1,50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கிராமப் பகுதிகளில் திறன் மிக்க குறைந்த செலவிலான அடிப்படை அஞ்சல் வசதிகளை கிடைக்கச் செய்யும் வகையில், கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம், படிகள் ஓய்வுப் பலன்கள் ஆகியவை உயர்த்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிராமப்புற மக்களின் சமூக மற்றும் பொருளாதார நிலையை முற்றிலும் மேம்படுத்தும். மத்திய மோடி அரசு இவ்வளவு நாட்கள் புறக்கணிக்கப்பட்ட ஒரு துறையில் பல வருட கோரிக்கைகளை மனதில் கொண்டு தீர்த்து வைத்துள்ளதர்க்கு தபால் துறையின் இந்த ஊழியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த முன்னேற்றங்கள் அனைத்தையும் முதன் முதலாக, மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதில் தமிழ் கதிர் பெருமைப்படுகிறது.
Next Story