Top
undefined
Begin typing your search above and press return to search.

தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமா?

தகுதி நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அ.தி.மு.க-வில் ஐக்கியமா?

By :

  |  11 Jun 2018 3:18 AM GMT

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பிற்கு பிறகு அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் பிளவு ஏற்பட்டது. ஒரு பிரிவு ஒ.பன்னீர்செல்வம் தலைமையிலும், மற்றோரு பிரிவு சசிகலா மற்றும் தினகரன் தலைமையிலும் பிரிந்தது. சசிகலாவின் பிரிவிலிருந்து எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சசிகலா - தினகரன் பிரிவிலிருந்து வெளியே வந்து ஒ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்தார். இதற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் பிரிவு அ.தி.மு.க கட்சியை முழுமையாக கைப்பற்றியது. இந்த சமயத்தில் அ.தி.மு.க கட்சியில் தேர்ந்து எடுக்கப்பட்ட 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தினகரன் அணிக்கு சென்றதால் அவர்களை சட்டசபை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தார். இந்த தகுதி நீக்கம் சரியானதா என்ற வழக்கில் கூடிய சீக்கிரம் உயர் நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
ஆனால், இந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களில் 16 சட்டமன்ற உறுப்பினர்கள் மீண்டும் அ.தி.மு.க கட்சிக்கே திரும்பி செல்லப்போகிறார்கள் என்று பேசப்படுகிறது. வழக்கின் தீர்ப்பு தினகரனுக்கு ஆதரவாக வந்தால், இந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பதவி மீண்டும் கிடைக்கப்படும். இவ்வாறு நேர்ந்தால் இவர்கள் நேரடியாக அ.தி.மு.க சார்பில் பதவி ஏற்றுக்கொள்வார்கள் என்று பேசப்படுகிறது. ஒரு வேலை தீர்ப்பு முதல்வர் பழனிசாமிக்கு சாதகமாக வந்தால், இவர்கள் அ.தி.மு.க  கட்சியிலே மீண்டும் போட்டி இடுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இவ்வாறு இவர்கள் மீண்டும் அ.தி.மு.க கட்சிக்கே வருவதற்கு காரணம் இவர்கள் தினகரன் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர் என தெரிகிறது. தினகரனுடன் வந்ததால் இவர்கள் தனிமைப்பட்டதாகவும், கட்சி துணையையும் இழந்ததாகவும் இவர்கள் வருத்தப்படுகின்றனர்.
Next Story