Top
undefined
Begin typing your search above and press return to search.

#GoBackModi என்று போலி போராளிகள் தூற்றினாலும்: முத்ரா, அனைவருக்கும் வீடு ஆகிய இரண்டு திட்டங்களிலும் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள பிரதமர் மோடி

#GoBackModi என்று போலி போராளிகள் தூற்றினாலும்: முத்ரா, அனைவருக்கும் வீடு ஆகிய இரண்டு திட்டங்களிலும் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ள பிரதமர் மோடி

By :

  |  13 Jun 2018 3:50 PM GMT

முத்ரா லோன் வழங்குவதில் தமிழகத்திற்கு தான் மத்திய மோடி அரசு அதிக நிதி ஒதுக்கியுள்ளது என்பதை தமிழ் கதிர் தளத்தில் பதிந்திருந்தோம். தற்போது அனைவருக்கும் வீடு திட்டத்திலும் தமிழகத்திற்கு அதிகமான வீடுகளை மோடி அரசு ஒதுக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
மத்திய மோடி அரசின், PMAY எனப்படும் பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 2,468 ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டுவதற்கான பணி உத்தரவுகளை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், நேரடியாகப் பயனாளிகளின் முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலமாக அனுப்பும் பணி உத்தரவு ஆணையை, தபால் அலுவலர்களிடம், மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் வழங்கினார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்: "இந்தியா முழுவதிலும் '2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு' என்ற இலக்குடன் செயல்படுத்தப்படும் பிரதமர் மோடியின் வீடு கட்டும் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் 2017-18-ஆம் ஆண்டுக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள, வீடு இல்லாத குடும்பங்களுக்கு, 19,069 வீடுகள் வழங்கப்படவுள்ளன.

பொருளாதாரக் கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி ஏழை எளிய மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஒரு கான்கிரீட் வீடு 269 சதுர அடியில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு, அரசு தரப்பில் ₹2 லட்சத்து 2,160 வழங்கப்படுகிறது. இதில், அரசு மானியம் ₹1 லட்சத்து 70 ஆயிரமும், ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு கூலியாக ₹20 ஆயிரத்து 160-ம், கழிப்பறை கட்ட தனியாக ₹12 ஆயிரமும் அளிக்கப்படுகிறது.
இதற்கான தொகை நான்கு தவணையாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக வரவு வைக்கப்படும். மேலும் வீடுகளை கட்டுபவர்களுக்கு மானிய விலையில் சிமென்ட், இரும்பு கம்பிகள், கதவு, ஜன்னல் முதலானவை வழங்கப்படுவது கூடுதல் சிறப்பு.
மத்திய மோடி அரசின் இந்தத் திட்டத்தில் இந்திய அளவில், விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கடந்த இரு ஆண்டுகளில் 51 ஆயிரத்து 500 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தற்போது, விழுப்புரம் மாவட்டத்துக்கு 8 ஆயிரம் வீடுகள் வழங்கப்பட்ட நிலையில், பிற மாவட்டங்களுக்கு ஒதுக்கி, திரும்பிய 7 ஆயிரம் வீடுகளையும் போராடி கூடுதலாகப் பெற்றுள்ளோம்.
விழுப்புரம் மாவட்டம் அதிக கிராமப் பகுதிகளைக் கொண்டதால், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். ஆகவே, இந்த வாய்ப்பை மக்கள் பயன்படுத்தி விரைவாக வீடுகளை கட்டி முடிக்க வேண்டும்" என்றார்.
மத்திய மோடி அரசின் திட்டங்களுக்கு தமிழகத்தில் பெரும் அளவில் வரவேற்பு இருப்பதற்கு இந்த திட்டமும் ஒரு சான்று. ஆனால் தமிழகத்தில் உள்ள பிரதான ஊடகங்கள் இந்த முன்னேற்றங்கள் பற்றியெல்லாம் விவாதம் நடத்தாமல் தட்டிக்கழிப்பது,  பல கேள்விகளை அரசியல் வட்டாரத்திலும்,  ஊடக வட்டாரத்திலும் எழுப்புகிறது.
Next Story