Top
undefined
Begin typing your search above and press return to search.

"நீட் தேர்வின் தோல்வியால் மாணவர்கள் தற்கொலையில் அரசியல்வாதிகள் லாபம் தேடுகிறார்கள்" - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

நீட் தேர்வின் தோல்வியால் மாணவர்கள் தற்கொலையில் அரசியல்வாதிகள் லாபம் தேடுகிறார்கள் - சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

By :

  |  13 Jun 2018 6:56 AM GMT

கடந்த வருடம் சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசு நீட் தேர்வால் ஏற்படும் தற்கொலையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும், தேர்வுக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. இந்த ஆணையை தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என்று கூறி சூரியப்பிரகாசம் என்னும் வழக்கறிஞர்  நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்தார். கடந்த வருடம் நீதிமன்றம் ஆணையிட்டும் இந்த வருடம் இரண்டு மாணவிகள் நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதற்கு தமிழக அரசு நீதிமன்றத்தின் ஆணையை பின்பற்றாமல் இருந்ததுதான் காரணம் என்று கூறியுள்ளார்.
இந்த தீர்ப்பு விசாரணைக்கு வந்த பொழுது நீதிமன்றத்திற்கு மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற தமிழக அரசு மேற்கொண்ட திட்டங்களை எடுத்துக்காட்டியது. நீட் தேர்விற்கு அரசு நடத்திய சிறப்பு பயிற்சி வகுப்புகளை பற்றியும் மற்ற திட்டங்களை பற்றியும் கூறியது. தற்கொலை சம்பவங்கள் நடைபெறுவதற்கு அரசால் பொறுப்பேற்க இயலாது என்றும் கூறியது. இந்த சமயத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசு நீட் தேர்விற்கு சிறப்பு பயிற்சி அளித்ததன் மூலம் 1337 மாணவர்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பிறகு நீதிமன்றம் தற்கொலைகளுக்கு அரசு மட்டும்தான் காரணம் என்று கூற கூடாது, என்றும் இதில் சமூகத்திற்கு மிக பெரிய பொறுப்பு உள்ளது என்றும் கூறியது. மேலும் அரசியல்வாதிகள் நீட் தேர்வு தோல்வியால் நடக்கும் தற்கொலைகளை அவர்களது அரசியல் லாபத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார் நீதிபதி கிருபாகரன்.
கடந்த வருடம் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதை தமிழக அரசியல்வாதிகள் மத்திய மற்றும் மாநில அரசுகளை எதிர்க்க தங்களது லாபத்திற்கு பயன்படுத்திக் கொண்டனர். இந்த வருடமும் இரண்டு மாணவிகள் தற்கொலை செய்ந்துக் கொண்டதால் அதே செயலை தொடங்குகிறார்கள்.  அரசியல்வாதிகளின் இத்தகைய செயல் மாணவர்களின் தன்னம்பிக்கையை குறைக்கிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகம் குறைவாக தேர்ச்சி பெறுவதற்கு அரசியல்வாதிகளின் இத்தகைய செயல் ஒரு முக்கியமான காரணம். நீதிபதியின் வார்த்தையை ஏற்று தமிழக அரசியவாதிகள் இந்த தேர்வின் மூலம் அரசியல் லாபம் தேடாமல் இருந்தால் மாணவர்களுக்கு பெரிய துணையாக இருக்கும்.
Pic Courtesy - Times of India
Next Story