Top
undefined
Begin typing your search above and press return to search.

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை - பொய் பரப்புரைகளை விளாசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை - சேலம் பசுமை வழிச்சாலை - பொய் பரப்புரைகளை விளாசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

By :

  |  14 Jun 2018 3:18 AM GMT

சென்னை-சேலம் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மக்களை தூண்டிவிடுவதற்கு தமிழ்நாட்டின் வளர்ச்சியை எதிர்க்கும் கும்பல்கள் மக்களுக்கு தகவல்களை தவறான முறைகளில் வதந்திகளையும், பொய்யான தகவல்களையும், பரப்பி வருகின்றனர். இதனால், இந்த திட்டத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குரல்  எழுப்பியுள்ளார். இதனை பற்றி வெளி வந்த பொய்களை வதந்திகள் தவறு என தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த திட்டத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்படும் எனும் செய்தியும், வன நிலங்கள் அழிக்கப்படும் எனும் செய்திகளும் தவறானது என்று கூறியுள்ளார். வெறும் 1900 ஹெக்டர் நிலங்கள் தான் கையகப்படுத்தப்படும் என்றும் அதிலும் 400 ஹெக்டர் அரசின் நிலம் தான் என்றும் தெளிவாக கூறியுள்ளார். இந்த திட்டம் சென்னையிலிருந்து சேலத்திற்கு மூன்று மணி நேரத்தில் செல்லும் அளவிற்கு பயண நேரத்தை குறைக்கும். மேலும், சென்னையிலிருந்து சேலம் செல்லும் தூரத்தை 70 கிலோ மீட்டர் குறைவாக்கும். இந்த சாலை போடுவதன் மூலம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான செலவையும் குறைத்துக்கொள்ளலாம்.
கையகபடுத்தப்படும் நிலங்களில் வெறும் 49 ஹெக்டர் தான் வனத்துறையை சேர்ந்தது; இந்த பகுதியில் மட்டும் சாலை அமைக்கப்படும் போது 70 மீட்டர் சாலை 45 - 50 மீட்டராக குறைக்கப்படும். இந்த சாலையின் மொத்த தூரம் 277.3 கிலோ மீட்டர், இதில் வனப்பகுதியில் செல்வது வெறும் 9.9 கிலோ மீட்டர் தான். கையகபடுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு பழைய விகிதத்தை விட நகர்ப்புற பகுதிகளில் 2 மடங்கு அதிகமாகவும் கிராமப்புற பகுதிகளில் 4 மடங்கு அதிகமாகவும் புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டங்கள் படி வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். இந்த திட்டம் மக்களுக்கு நன்மை தரக்கூடியது என்றும் இந்த திட்டம் வெற்றி பெற மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Next Story