Top
undefined
Begin typing your search above and press return to search.

திருநங்கையை சட்டமன்றத்தில் வசைபாடிய கேரள சட்டமன்ற உறுப்பினர்: மூச்சு விடாத தமிழக ஊடகங்கள்!

திருநங்கையை சட்டமன்றத்தில் வசைபாடிய கேரள சட்டமன்ற உறுப்பினர்: மூச்சு விடாத தமிழக ஊடகங்கள்!

By :

  |  14 Jun 2018 3:04 AM GMT

சியாமா S பிரபா என்பவர், கேரளா சமூக நீதி இயக்குநரகத்தில் உள்ள திரிநங்கையர் பிரிவில் மாநில திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார். கேரளா சட்டமன்ற உறுப்பினரான P. C.ஜார்ஜ் அவர்களை, ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு முறை சியாமா சந்தித்துள்ளார். மீண்டும் P. C.ஜார்ஜ் அவர்களை சட்டப்பேரவையில் பார்த்த உடன், பழைய சந்திப்பை மனதில் வைத்துக்கொண்டு, அவரிடம் பேச சென்றுள்ளார்.
ஆனால் இம்முறை சியாமா சந்தித்தது முற்றிலும் வித்யாசமான P. C.ஜார்ஜை தான். சியாமாவை மிகவும் மோசமாக அவமானப் படுத்தியுள்ளார் P. C.ஜார்ஜ். சியாமாவை பார்த்து,  "நீங்கள் ஒரு ஆண் இல்லையா?,  எதற்காக இங்கு இருக்கிறீர்கள்?, எதற்காக இப்படி உடை அணிந்திருக்கிறீர்கள்?, என்னால் உங்களின் மீசையை பார்க்க முடிகிறதே", என்றெல்லாம் பேசி சியாமாவை கொச்சை படுத்தியுள்ளார்.
ஒரு மக்களின் பிரதிநிதியாக இருப்பவர் தன்னை இவ்வாறு பேசியதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் சியாமா. இதனால் தான் மிகவும் புண் பட்டிருப்பதாகவும், மன வேதனைக்கு ஆளாகி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, பிஹார் உள்ளிட்ட அனைத்து மாநில சட்டமன்ற பா.ஜ.க உறுப்பினர்களும் தும்மினால் கூட அவர்களை பற்றி செய்திகளை வெளியிடும் தமிழகத்தின் பிரதான ஊடகங்கள், நமது அண்டை மாநிலமான கேரளத்தில் நடந்த இந்த நிகழ்வை செய்தியாகவே பதிவிடவில்லை. தமிழக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் அரசியல் உள் நோக்கம் கொண்டவையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News Inputs & Pic Credits - The NewsMinute.
Next Story