Top
undefined
Begin typing your search above and press return to search.

#BigBreaking : புனித ரமலான் நெருங்கும் நிலையில் காஷ்மீரில் பத்திரிகையாளர் துடிக்க துடிக்க சுட்டுப் படுகொலை

#BigBreaking : புனித ரமலான் நெருங்கும் நிலையில் காஷ்மீரில் பத்திரிகையாளர் துடிக்க துடிக்க சுட்டுப் படுகொலை

By :

  |  14 Jun 2018 3:03 PM GMT

ரைசிங் காஷ்மீர் என்ற பத்திரிகையின் எடிட்டர், ஷுஜாட் புகாரி என்பவர் காஷ்மீரில் தனது அலுவகத்திற்கு வெளியில், அடையாளம் தெரியாத நபர்களால் துடிக்க துடிக்க சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். புனித ரமலான் நோன்பு கடைபிடிக்கும் இச்சமயத்திலும், ரமலான் பண்டிகை நெருங்கும் தருணத்திலும் நடந்திருக்கும் இப்படுகொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து,  காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முப்தி அவர்கள், கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
https://twitter.com/MehboobaMufti/status/1007267616426086401
அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பத்திரிகையாளரின் படுகொலைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்ததுடன், ரமலான் பண்டிகை தருணத்தில் நடந்திருக்கும் இந்த சம்பவம், பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். மற்றும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், பத்திரிகையாளர்களும் இந்த படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Next Story